ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டி: இந்தியா 216 ரன்கள் குவித்து இமாலய சாதனை; இலங்கைக்கு 217 ரன்கள் இலக்கு! - Seithipunal
Seithipunal


ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் டி20 கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் (தங்கப் பதக்கத்திற்கான போட்டி) இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார்.

அதன்படி களம் புகுந்த இந்திய அணிக்குத் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா கூட்டணி அதிரடியான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்து அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்தது. அதிரடியாக விளையாடிய ஷபாலி வர்மா 28 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா, 79 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதிக்கட்டத்தில் களம் இறங்கிய ரீச்சா கோஷ், இலங்கை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து அதிரடி சரவெடியை நிகழ்த்தினார். அவர் வெறும் 22 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உட்பட 49 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இதன் மூலம் இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் என்ற இமாலய இலக்கைக் குவித்தது. இது ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் கிரிக்கெட் வரலாற்றிலேயே பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். இதனைத் தொடர்ந்து 217 ரன்கள் எடுத்தால் தங்கப் பதக்கம் வெல்லலாம் என்ற இலக்குடன் இலங்கை அணி தற்போது களம் இறங்கி விளையாடி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Asian Games Womens Cricket Final Mandhana and Richa Power India to Record 216 Against Sri Lanka


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->