CM மாற்றம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி: ‘நான் சித்தராமையாவுடன் தான்’ – டி.கே. சிவகுமார் - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

ஆட்சி அமைந்தபோது, முதல்வர் பதவியை சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் தலா இரண்டரை ஆண்டுகள் பகிர்ந்து வகிப்பார்கள் என்ற உடன்பாடு இருந்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டுக் காலம் நிறைவடைந்ததால், அடுத்த கட்டமாக டி.கே. சிவகுமார் முதல்வராக பொறுப்பேற்கலாம் என்றும், அமைச்சரவையில் மாற்றங்கள் வரலாம் என்றும் காங்கிரஸ் தரப்பில் தகவல்கள் பரவின.

இருப்பினும், தாம் முழு ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்து ஆட்சியை நிறைவு செய்வேன் என்று சித்தராமையா தொடர்ந்து உறுதியாகக் கூறி வருகிறார்.இந்த சூழலில், காங்கிரஸ் எம்.எல்.ஏ இக்பால் உசேன், டி.கே. சிவகுமார் விரைவில் முதல்வராக பதவியேற்பார் என தெரிவித்தது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், முதல்வர் பதவி தொடர்பாக சித்தராமையாவுடன் கருத்து வேறுபாடு அல்லது மோதல் இருப்பதாக பரவி வரும் வதந்திகளை துணை முதல்வர் டி.கே. சிவகுமார் முற்றிலும் மறுத்துள்ளார்.

“எந்த நெருக்கடியான சூழலிலும் நான் சித்தராமையாவுடன் நிற்பேன். அவரும் எனக்குப் பக்கபலமாக இருப்பார். எங்களின் ஒற்றுமை எதிர்காலத்திலும் தொடரும்” என்று அவர் தெளிவுபடுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

End rumors about change CM I am Siddaramaiah DK Shivakumar


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->