பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து! சாத்தூர் முழுக்க பரபரப்பு..!
Fire accident cracker factory stir Sattur
விருதுநகர் சிவகாசி, சாத்தூர், தாயில் பட்டி அருகே சுமார் 1000 -க்கும் அதிகமான பட்டாசு தொழிற்சாலைகள் இருக்கின்றன.இந்நிலையில், தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டதால், பட்டாசு தயாரிப்பு தீவிரம் அடைந்து காணப்படுகிறது.

இதனிடையே, சாத்தூர் பகுதி கீழத்தாயில்பட்டி கிராமத்தில், சிவகாசி பூர்விகமான ராமமூர்த்திக்கு சொந்தமான குயில் பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது.இது நாக்பூர் உரிமம் பெற்று, பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்து வருகிறது.
இதிலுள்ள 40 அறைகளில் 100-க்கும் மேற்பட்டோர் பட்டாசு உற்பத்தி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் பட்டாசு உற்பத்தி வேலையில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அச்சமயம், மருந்து கலக்கும் பணியின்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென வெடிவிபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தால் ஒரு அறையின் மேற்கூரை மட்டும் இடிந்து தரைமட்டமாகியது.இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இது குறித்து தகவலறிந்த வெம்பக்கோட்டை மற்றும் சாத்தூர் தீயணைப்பு மீட்புத்துறையினர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் களமிறங்கினர்.இந்த வெடிவிபத்து குறித்து வெம்பக்கோட்டை காவலர்கள் வழக்குப்பதிவு செய்து மேற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Fire accident cracker factory stir Sattur