களை கட்டியது ஓணம் பண்டிகை: வாழைத்தார்- பூக்கள் விலை கடும் உயர்வு!
The Onam festival has caused a rise in prices prices for bananas and flowers have increased significantly
நாளை மறுநாள் மலையாளம் பேசும் மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஒணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இதையொட்டி குமரியில் வாழைத்தார்- பூக்கள் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது.
குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்களில் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தபூ கோலம் வரைந்து ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். கல்லூரிகளில், மாணவிகள் ஓணம் சேலைஅணிந்து வந்திருந்தனர்.
அரசு அலுவலகங்களிலும் பெண் ஊழியர்கள் ஓணம் சேலை அணிந்து இருந்தனர். பல வண்ண கலரில் கோலம் வரைந்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர். குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் ஓணம் பண்டிகை அத்தபூ கோலம் வரைந்தும் ஓண ஊஞ்சலாடியும் கொண்டாடி வருகின்றனர்.
ஓணம் பண்டிகையையடுத்து மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகள் களை கட்டியுள்ளது.கூட்டம் அலைமோதுகிறது . நாகர்கோவிலில் இருந்து கேரளாவிற்கு வாழைத்தார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதால் அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. நாகர்கோவில் அப்டாமார்க்கெட்டிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து செவ்வாழை வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்திருந்தன. அவற்றை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
குமரி மாவட்டம் மட்டுமின்றி தூத்துக்குடியில் இருந்தும் வாழை இலைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஒரு கட்டு வாழை இலைகள் சாதாரணமாக ரூ.500 முதல் 800க்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ.5 ஆயிரம் வரை விற்பனையானது.இதேபோல தோவாளை பூ மார்க்கெட்டிலும் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. பிச்சி, மல்லிகை பூக்களின் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்து காணப்பட்டது. அவை கிலோ ரூ. 1000-க்கு மேல் விற்பனையானது. இந்த நிலையில் இன்றும் பிச்சி, மல்லிகை பூக்களின் விலை உயர்ந்தது. சம்பங்கி, கேந்தி, அரளி பூக்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.
English Summary
The Onam festival has caused a rise in prices prices for bananas and flowers have increased significantly