இன்ஸ்டாகிராமில் வயதைக் குறைத்து காட்டிப் பழகிய 52 வயது ஆண்டி; திருமணத்திற்கு வற்புறுத்தியதால் கொலை செய்துள்ள 26 வயது காதலன்..!
A 26 year old man in Uttar Pradesh has murdered his 52 year old girlfriend who used to understate her age on Instagram
உத்தரபிரதேசத்தில் இன்ஸ்டாகிராமில் 52 வயதுப் பெண், தன்னை இளமையாகக் காட்டிக் 26 வயது இளைஞருடன் பழகி வந்துள்ளார். அத்துடன், அவரை திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர் அவரைக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், மெயின்புரி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர். சடலத்தில் கழுத்தில் நெரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்து உள்ளனர்.

அதன்படி, விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்யப்பட்டவர் ஃபரூக்காபாத்தைச் சேர்ந்த 52 வயதுப் பெண் என்பதும், நான்கு பிள்ளைகளின் தாய் என்பதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அருண் ராஜ்புத் (26) என்ற இளைஞரைப் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போதும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதாவது, 26 வயதான ராஜ்புத்தும், 52 வயதான அந்தப் பெண்ணும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். அத்துடன், அந்தப் பெண்மணி , இன்ஸ்டாகிராமில் தன்னை இளமையாகக் காட்டிக் கொண்டுள்ளார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இருவரும் தொலைப்பேசி எண்களைப் பரிமாறி, அடிக்கடி பேசியதோடு, நேரில் சந்தித்தும் வந்துள்ளனர்.

அப்போதுதான் அந்தப் பெண்ணின் உண்மையான வயது இளைஞருக்குத் தெரிய வந்துள்ளது. அத்துடன், அந்த இளைஞர் குறித்த பெண்மணியிடம் இருந்து சுமார் ரூ. 1.5 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி அந்தப் பெண், இளைஞரைச் சந்திப்பதற்காக ஃபரூக்காபாத்தில் இருந்து மெயின்புரிக்கு வந்துள்ளார். அப்போது, தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறும், கொடுத்த கடனைத் திருப்பித் தருமாறும் அருண் ராஜ்புத்திடம் வற்புறுத்தியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அருண் ராஜ்புத், அந்தப் பெண் அணிந்திருந்த துப்பட்டாவாலேயே அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், அவரது செல்போனை எடுத்துக்கொண்டு சிம் கார்டை அப்புறப்படுத்தியுள்ளார். தொடர்ந்து நடந்த விசாரணையில், அருண் ராஜ்புத் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
தன்னை வயதைக் குறைத்துக் காட்டி ஏமாற்றி தன்னை, திருமணம் செய்ய வற்புறுத்தியதும், கடனைத் திருப்பிக் கேட்டதும் கொலைக்கு காரணம் என அருண் ராஜ்புத் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
A 26 year old man in Uttar Pradesh has murdered his 52 year old girlfriend who used to understate her age on Instagram