செல்வராகவனின் கதை! – ‘மனிதன் தெய்வமாகலாம்’ புதிய போஸ்டர் இணையத்தில்..!
Selvaraghavans story new Man Can Become God poster online
நடிகர் செல்வராகவன் நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’ ரசிகர்களை கவரத் தயார் நிலையில் உள்ளது. இப்படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் இயக்குகிறார்.
இவர் முன்பு ‘டிரிப்’, ‘தூக்குத்துரை’ போன்ற படங்களை இயக்கியுள்ளார். இதில் ஒய்ஜி மகேந்திரன், கௌசல்யா, கௌசி ரவி, மைம் கோபி உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்த கதை இயற்கையும் அமைதியும் சூழ்ந்த கிராமத்தில் நடக்கும் பெரும் சோக நிகழ்வினால் கிராம மக்கள் ஒற்றுமை இழக்கும் தருணத்தை வெளிப்படுத்துகிறது.
அங்கு நாயகன், தனது மனவலிமையை நம்பி, கிராமத்தை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
அவரது இந்த தீர்மானம் அவரை கிராமத்திலே தெய்வ போல் உயர்த்தும் கதைதான் படத்திற்கு தலைப்பாக அமைந்துள்ளது.
இதற்கு சமீபத்தில் புதிய போஸ்டர் இணையத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவுகிறது. படம் அடுத்தாண்டில் ரிலீஸ் ஆகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
English Summary
Selvaraghavans story new Man Can Become God poster online