அதிமுகவில் அதிரடி நடவடிக்கை! – ஒழுக்கக்கேடு குற்றச்சாட்டில் பலர் நீக்கம், புதிய நியமனமும் அறிவிப்பு! - எடப்பாடி பழனிச்சாமி - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சிக்குள் ஒழுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்ததாவது,"கழகத்தின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதுடன், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கருதப்பட்ட காரணத்தால், வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் லண்டன் வெங்கடேஷ், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி முன்னாள் செயலாளர் விசு (எ) விசுவாசி,துறைமுகம் கிழக்கு பகுதி இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஏ.ஏ. கலையரசு ஆகியோர், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார்கள்.

மேலும், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் இவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனுடன், எழும்பூர் மேற்கு பகுதி கழக செயலாளர் ஏ. சம்பத் குமார், மகளிர் அணி செயலாளர் எம். இளவரசி, மாணவர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் புரசை கிருஷ்ணன் ஆகியோரும் இன்று முதல் அவரவர் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம் – எழும்பூர் மேற்கு பகுதி செயலாளராக புரசை எம். கிருஷ்ணன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு, அ.தி.மு.க.வில் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பதை மீண்டும் வலியுறுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

major crackdown AIADMK Several expelled charges indiscipline new appointments announced Edappadi Palaniswami


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->