வாரத்தில் மூன்று நாட்களுக்கு விடுமுறை அறிவித்துள்ள இலங்கை அரசு; எரிபொருள் தட்டுப்பாட்டால் ஒரு நாடே முடங்கும் நிலை..!
The Sri Lankan government has declared a thre day holiday per week due to a fuel shortage
எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கை அரசு 3 நாட்களுக்கு விடுமுறையை அறிவித்துள்ளது.
ஈரான் போர் காரமாக உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலபுகிறது. இதன் காரணமாக சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் நமது அண்டைய தீவு நாடான இலங்கை தற்போது சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடியின் ஒரு பகுதியாக, மீண்டும் வரலாறு காணாத அளவு எரிபொருள் மற்றும் மின்சாரத் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதும், விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதும் இலங்கையை மீண்டும் நிலைகுலையச் செய்துள்ளது.

இந்த இக்கட்டான சூழலைச் சமாளிப்பதற்காக அந்நாட்டு அரசு இனி அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே அலுவலகம் மற்றும் கல்வி நிலையங்களுக்குச் சென்றால் போதும் என்று புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை ஓரளவாவது பாதுகாக்க முடியும் என இலங்கை அரசு எதிர் பார்க்கிறது.
குறிப்பாக, புதன்கிழமை தோறும் கூடுதல் விடுமுறை அளிப்பதன் மூலம் போக்குவரத்துக்கான பெட்ரோல், டீசல் தேவை பெருமளவு குறையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அத்துடன், சமையல் எரிவாயுக்காக மக்கள் கிலோமீட்டர் கணக்கில் வரிசையில் நிற்கும் நிலையில், இந்த நான்கு நாள் வேலைத் திட்டம் சாமானிய மக்களுக்குச் சற்று ஆறுதலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

இருப்பினும், இந்த விடுமுறை அறிவிப்பு அத்தியாவசியச் சேவைகளுக்குப் பொருந்தாது என்றும், மருத்துவமனைகள், மின்சார வாரியம், குடிநீர் விநியோகம் மற்றும் பாதுகாப்புத் துறை போன்ற துறைகள் வழக்கம் போல் தடையின்றி இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், பாடத்திட்டங்களை முடிக்க மாற்று ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாட்டால் ஒரு தீவு நாடே முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது
English Summary
The Sri Lankan government has declared a thre day holiday per week due to a fuel shortage