சூர்யாவின் அடுத்த படத்தில் கைக்கோர்க்கும் பிரபல இயக்குனர் யார் தெரியுமா...?
Do you know who famous director collaborating Suriya on his next film
‘கருப்பு’ படத்திற்குப் பிறகு சூர்யா தொடர்ந்து வேகமாக தனது அடுத்தடுத்த படங்களில் நடிக்க முனைப்பு காட்டி வருகிறார்.
மேலும், வெங்கட் அட்லுரி இயக்கத்தில் உருவான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ள அவர், இந்தப் படத்தை ஜூன் மாதத்தில் ரசிகர்களுக்கு விருந்தாக கொண்டு வரத் தயாராகியுள்ளார்.

இதற்கிடையில், ‘ஆவேசம்’ புகழ் ஜித்து மாதவன் இயக்கத்தில், காவல்துறை அதிகாரியாக மாறி, சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். இந்த படம் இந்த ஆண்டிலேயே திரைக்கு வரும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த சூழலில், ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, தனித்துவமான கதைகளால் பெயர் பெற்ற ஹெச். வினோத் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
மேலும், ‘ஜன நாயகன்’ படம் வெளியானதும், இந்த புதிய கூட்டணியின் பணிகள் துவங்கும் என தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக கமல் ஹாசன் மற்றும் தனுஷ் படங்களை இயக்கும் வாய்ப்பிலிருந்து விலகிய வினோத், இப்போது சூர்யாவுடன் கைகோர்க்க உள்ளதாக வெளியாகும் இந்த தகவல், கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Do you know who famous director collaborating Suriya on his next film