மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக பிரபல நடிகர் மீது குற்றச்சாட்டு...! - காவலர்களைத் தாக்க முயன்றாரா...? உண்மைச் சம்பவம் என்ன...? - Seithipunal
Seithipunal


மலையாள தொலைக்காட்சி உலகில் நகைச்சுவை மற்றும் குடும்பக் கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த பிரபல டி.வி. நடிகர் சித்தார்த் பிரபு, திரையுலகத்துக்கு அப்பாற்பட்டு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தையும் நடத்தி வரும் தொழிலதிபராகவும் அறியப்படுகிறார்.

இந்த நிலையில், நேற்று இரவு கோட்டயத்தில் இருந்து காரில் பயணித்துக் கொண்டிருந்த சித்தார்த் பிரபு, திடீரென வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. வேகமாக வந்த அவரது கார், சாலையோரமாக நடந்து சென்ற லாட்டரி விற்பனையாளர் ஒருவரின் மீது மோதி, அவரை பல அடி தூரம் தூக்கி வீசிவிட்டது.

இந்த விபத்தில் அந்த நபர் படுகாயமடைந்து, சாலையில் அலறித் துடித்தார்.இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக சம்பவ இடத்தில் திரண்டனர். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து, காயமடைந்த லாட்டரி வியாபாரியை அவசர சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, விபத்தை ஏற்படுத்திய நடிகர் சித்தார்த் பிரபுவிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் மதுபோதையில் இருந்தது உறுதியானதாக கூறப்படுகிறது. மேலும், கேள்வி எழுப்பியவர்களை அவர் கடுமையாக திட்டி, தாக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நிலைமையை கட்டுப்படுத்த முயன்ற போலீசார்மீதும் அவர் தாக்குதல் நடத்த முயன்றதாக தகவல்கள் வெளியாகி, சம்பவ இடம் முழுவதும் கடும் பரபரப்பாக மாறியது.

இதனைத் தொடர்ந்து, போலீசார் நடிகர் சித்தார்த் பிரபுவை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பின்னர் அவரை கைது செய்தனர். தற்போது, சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

famous actor accused driving under influence alcohol Did he attempt attack police officers What real story


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->