வழிபாட்டு தலம் இரத்தத்தில் மூழ்கியது...நைஜீரியா மசூதியில் தற்கொலை வெடிப்பு..! - 5 பேர் பலி, 35 பேர் காயம்
place worshipdrenched blood Suicide bombing mosque Nigeria 5 killed 35 injured
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் மைதுகுரி நகரம், நேற்று மாலை திடீரென ரத்தக்கறை படிந்த துயரக் களமாக மாறியது.
அங்குள்ள ஒரு மசூதியில் மாலை நேர தொழுகை அமைதியாக நடைபெற்று கொண்டிருந்த வேளையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மசூதிக்குள் புகுந்து, உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க வைத்து தற்கொலை தாக்குதல் நடத்தியுள்ளார்.

எதிர்பாராத இந்த கொடூர தாக்குதலில், ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 35 பேர் பலத்த காயங்களுடன் ரத்தக்கசிவில் சிக்கினர். வெடிப்பின் சத்தம் மற்றும் புகையால் அந்த பகுதி முழுவதும் அலறல் சத்தமும் குழப்பமும் நிரம்பியது.
இந்த தகவல் கிடைத்த உடனே மீட்புப் படையினரும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த பயங்கர தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இதனால், சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கலாம்? தாக்குதலின் நோக்கம் என்ன? என்ற கோணங்களில் நைஜீரிய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மைதுகுரி நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் மத்தியில் பதற்றம் நிலவுகிறது.
English Summary
place worshipdrenched blood Suicide bombing mosque Nigeria 5 killed 35 injured