41 உயிர்களை காவு கொண்ட நெரிசல் வழக்கு...! - த.வெ.க. முக்கிய நிர்வாகிகளுக்கு டெல்லி சி.பி.ஐ. சம்மன்...!
stampede case that claimed 41 live Delhi CBI summons key functionaries TvK party
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கோர நெரிசல் விபத்து, தமிழக அரசியல் களத்தை உலுக்கிய மிகப்பெரிய சம்பவமாக மாறியது.
இந்த துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்தியது. கூட்டத்திற்கான அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்ட நிர்வாகத்தில் பெரும் குறைபாடுகள் இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

தற்போது, இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த பின்னணியில், விசாரணை அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூன் ஆகியோருக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் வருகிற 29-ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதேபோல், இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோருக்கும் விசாரணைக்கான அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அனைத்து நிர்வாகிகளும் டெல்லி சென்று சி.பி.ஐ. முன் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விசாரணை, அந்தக் கோர விபத்திற்குப் பின்னால் உள்ள பொறுப்புகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
English Summary
stampede case that claimed 41 live Delhi CBI summons key functionaries TvK party