பிரசவம் பார்த்தது நீங்கள்தானே...? - திருமாவளவன் விமர்சனத்திற்கு சீமான் பளிச் பதில்
You who oversaw delivery werent you Seeman sharp reply Thirumavalavans criticism
சென்னை திருவேற்காட்டில் இன்று நாம் தமிழர் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார்.
சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், “நீங்களும், நடிகர் விஜய்யும் ஆர்.எஸ்.எஸ். உருவாக்கியவர்கள்” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறிய விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த சீமான், தனது வழக்கமான கூர்மையான பாணியில்,“என்னையும், தம்பி விஜய்யையும் ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளைகள் என்று என் அண்ணன் திருமாவளவன் சொல்லியிருக்கிறார்.
அப்படியென்றால், பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் எங்களை பெற்றெடுத்த நேரத்தில், அவர் அருகிலேயே இருந்து பிரசவம் பார்த்திருக்க வேண்டும்” என்று பதிலடி கொடுத்தார்.
மேலும், “நீண்ட காலமாக என்னை போலி தமிழ் தேசியவாதி என்றும் விமர்சித்து வருகிறார். பேசுவது அண்ணன்தானே… அதை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை” என்று கூறி விவகாரத்தை முடித்தார்.
English Summary
You who oversaw delivery werent you Seeman sharp reply Thirumavalavans criticism