சிஎஸ்கேக்கு துருப்புச் சீட்டாகும் ‘SRS’ கூட்டணி! உலக கோப்பையால் CSK-க்கு அடித்த அதிர்ஷ்டம்! இனி தோனி படையை நிறுத்த முடியாது
The SRS alliance is a trump card for CSK CSK is lucky to win the World Cup Dhoni army can no longer be stopped
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் இந்திய அணி மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வென்று பல சாதனைகளை படைத்துள்ளது.
இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக சஞ்சு சாம்சன் மற்றும் சிவம் துபே ஆகியோரின் சிறப்பான ஆட்டம் அமைந்தது. இவர்களுடன் ருதுராஜ் கெய்க்வாட் இணையும் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அது மிகப்பெரிய பலமாக இருக்கும் என கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன், உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் 46 பந்துகளில் 89 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். தொடக்கத்தில் எதிர்பார்த்த அளவில் ரன்கள் எடுக்க முடியாமல் இருந்தாலும், பின்னர் அவர் தனது அதிரடி ஆட்டத்தால் கவனம் ஈர்த்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 97 ரன்களும், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 89 ரன்களும் எடுத்த அவர், தொடரின் சிறந்த வீரராகவும் தேர்வானார்.
அதேபோல் ஆல்-ரவுண்டர் சிவம் துபேவும் தொடரில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நெதர்லாந்து அணிக்கு எதிராக 66 ரன்கள் எடுத்த அவர், முக்கியமான போட்டிகளில் அதிரடி ஆட்டம் ஆடி அணிக்கு உதவினார். இறுதிப் போட்டியிலும் 8 பந்துகளில் 26 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பேட்டிங்குடன் பவுலிங்கிலும் அவர் முக்கிய பங்களிப்பு செய்தார்.
மறுபுறம் ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணியின் நம்பிக்கையான வீரராக பார்க்கப்படுகிறார். அமைதியான ஆனால் நிலையான பேட்டிங் பாணியால் அணிக்கு ஸ்திரத்தன்மையை வழங்கும் திறன் அவரிடம் உள்ளது.
இதனால் சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே ஆகியோரின் கூட்டணி — “SRS காம்போ” — சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூவரின் பேட்டிங் சக்தி இணைந்தால், வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியை எதிர்கொள்ள மற்ற அணிகளுக்கு கடினமாக இருக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
The SRS alliance is a trump card for CSK CSK is lucky to win the World Cup Dhoni army can no longer be stopped