தாராபுரம் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம். கார்த்திகாவை ஆதரித்து சீமான் நாளை பரப்புரை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் காலியாக உள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய தனித்தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், இத்தொகுதிகளில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதில் தாராபுரம் தொகுதியில் பிரதான கட்சிகளான தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ப. சத்தியபாமா, திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் எஸ். சுகன்யா, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கே. பானுமதி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) சார்பில் பி. லட்சுமணன் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர். அதேபோல, நாம் தமிழர் கட்சியின் சார்பில் எம். கார்த்திகா வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இச்சூழலில், தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம். கார்த்திகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் முதற்கட்டமாகத் தேர்தல் பரப்புரை செய்ய உள்ளதாக அக்கட்சியின் தலைமையகம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, தாராபுரம் முருகன் கோவில் அருகில் நாளை (21.09.2026) திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சீமான் கலந்துகொண்டு வேட்பாளரை அறிமுகப்படுத்தி, முதன்மைப் பிரச்சார உரையாற்ற உள்ளார். இதனால் தாராபுரம் தொகுதி தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dharapuram By-Election NTK Chief Seeman to Campaign for Candidate M Karthika Tomorrow


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->