இலவச ஆடை திட்டம் ரத்து... புதுச்சேரியின் புதிய பொங்கல் மாடல்...! - அரசு அறிவிப்பு - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த ‘இலவச ஆடை’ திட்டத்திற்கு புதுச்சேரி அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இனிமேல் இலவச ஆடைக்கு பதிலாக, ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும் என அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன் மூலம், பொங்கல் கால உதவிகள் நேரடி பணமாற்று (DBT) முறையில் வழங்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை புதுச்சேரியில், சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு 20 கிலோ இலவச அரிசியும், மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கு 10 கிலோ இலவச அரிசியும் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிவாரணங்கள் தொடரும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 2 கிலோ இலவச கோதுமை வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த திட்டத்தின் தொடக்கமாக, திலாசுப்பேட்டை ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு 2 கிலோ இலவச கோதுமையை வழங்கி, முதல்-அமைச்சர் ரங்கசாமி திட்டத்தை நேரடியாக தொடங்கி வைத்தார்.

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்காக தலா 2 கிலோ வீதம் மொத்தம் 4 கிலோ இலவச கோதுமை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேசிய முதல்-அமைச்சர் ரங்கசாமி,“இலவச அரிசி மற்றும் கோதுமை வழங்கும் திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

சட்டமன்றத்தில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் அரசு உறுதியாக செயல்படுத்தி வருகிறது” என்று தெரிவித்தார்.மேலும், ஜனவரி 3-ஆம் தேதி முதல் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Free clothing scheme cancelled Puducherrys new Pongal model Government announcement


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->