ஆசிய ஹாக்கி 'சூப்பர்-4' சுற்று: இந்தியா, தென் கொரிய அணிகள் மோதிய போட்டி 'டிரா'..!
India and South Korea draw in Asian Hockey Super 4 round
ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் 12-வது சீசன் பீகாரில் நடைபெற்றுவருகிறது. இதில், இந்தியா, 'நடப்பு சாம்பியன்' தென் கொரியா, மலேசியா, கஜகஸ்தான் உட்பட 08 அணிகள், 02 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன.
'ஏ' பிரிவில் இருந்து இந்தியா, சீனா, 'பி' பிரிவில் இருந்து மலேசியா, 'நடப்பு சாம்பியன்' தென் கொரியா அணிகள் முதல் இரு இடங்களை பிடித்து 'சூப்பர்-04' சுற்றுக்கு முன்னேறின. நேற்று மழை காரணமாக 'சூப்பர்-4' போட்டிகள் 50 நிமிடம் தாமதமாக தொடங்கியது. இதில் உலகத் தரவரிசையில் 07வது இடத்திலுள்ள இந்திய அணி, 14-வது இடத்திலுள்ள தென் கொரியாவை சந்தித்தது.

போட்டியின் 08-வது நிமிடத்தில் இந்தியாவின் ராஜ் குமாரிடம் இருந்து பந்தை பெற்ற ஹர்திக் சிங், பீல்டு கோல் அடித்து உதவினார். 12-வது நிமிடம் இந்திய வீரர்கள் செய்த தவறு காரணமாக, தென் கொரியாவுக்கு 'பெனால்டி ஸ்டிரோக்' கிடைத்தது. எளிதான இந்த வாய்ப்பை ஜிஹன் யங் கோலாக மாற்றினார்.
அடுத்த 02-வது நிமிடத்தில், தென் கொரியா வீரர் கிம், 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் ஒரு கோல் அடிக்க, இந்திய அணி முதல் பாதியில் 1-2 என பின்தங்கி இருந்தது.

இரண்டாவது பாதியிலும் இந்திய அணி வீரர்கள் கோல் அடிக்க திணறிய நிலையில், 41வது நிமிடத்தில் சுக்ஜீத் சிங் அடித்த பந்து, தென் கொரிய கோல் கீப்பர் மீது பட்டுத் திரும்பியது. அடுத்த சில நிமிடத்தில் அபிஷேக் 'ரிவர்ஸ் ஹிட்' முறையில் பந்தை அடிக்க, கோல் போஸ்ட் மீது பட்டுச் செல்ல, ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அதன் பின்னர், 18 முறை முதல் 46 நிமிடத்தில் தென் கொரியா ஏரியாவுக்குள் 18 முறை நுழைந்த போதும், சரியான 'பினிஷிங்' இல்லாததால், 02-வது கோல் அடிக்க முடியாமல் இந்தியா திணறியது.
இறுதியில், 52-வது நிமிடத்தில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கொடுத்த பந்தை வாங்கிய மன்தீப் சிங், அப்படியே வலைக்குள் தள்ளி கோலாக மாற்றினார். ஆட்ட நேர முடிவில் 2-2 என்ற கணக்கில் போட்டி 'டிரா'ஆகியது.
English Summary
India and South Korea draw in Asian Hockey Super 4 round