ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை வரவேற்றுள்ள ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு; பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து..! - Seithipunal
Seithipunal


56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தொடர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் பங்கேற்றனர். 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

'தினசரி அத்தியாவசியப் பொருட்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் ஆகியவற்றில் திருத்தப்பட்ட அடுக்குகளுடன் கூடிய ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களை நாங்கள் வரவேற்கிறோம். ஏழைகளுக்கு ஆதரவான, வளர்ச்சி சார்ந்த இந்த முடிவு, விவசாயிகள் முதல் வணிகங்கள் வரை சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பயனளிக்கும்.

இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரை நான் வாழ்த்துகிறேன். சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி அறிவித்தபடி, இந்த அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் நமது வரி கட்டமைப்பின் மூலோபாய மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட முன்னேற்றத்தைக் குறிக்கின்றன. இது ஒவ்வொரு இந்தியருக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்கிறது.' என்று குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu welcomes GST reforms


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->