'கச்சத்தீவு எங்களுக்கே சொந்தம், அரசியலுக்காக இதுகுறித்து பேசுகின்றனர்'; சென்னை வந்துள்ள இலங்கை அமைச்சர் சுந்திரலிங்கம் பிரதீப் திட்டவட்டம்..! - Seithipunal
Seithipunal


தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினரால் தமிழாகி மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், இலங்கை மீனவர்கள் எல்லை தண்ணி மீன் பிடுத்தனர் என இந்திய கடற்படை கைது செய்வதும் இடியப்ப சிக்கலால் இருந்து வருகிறது.

இதன்காரணமாக தமிழக மீனவர்களின் நலன் கருதி கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என பல்வேறு தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசும் போது, கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். தற்போது இந்த விஷயம் இலங்கை அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் மாநாடு முடிந்த உடனே இதை பற்றி இலங்கை அரசியல்வாதிகளும் பேச தொடங்கியுள்ளனர். அந்நாட்டின் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, இலங்கை வரலாற்றில் முத்த முறையாக கச்சத்தீவுக்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களிடம் உரையாற்றினார். அத்துடன், 'கச்சத்தீவு எங்களுக்கு சொந்தம். யாருக்கும் அடிபணிந்து தாரைவார்த்து கொடுக்கமாட்டோம்' என திட்டவட்டமாக அறிவித்துள்ளார். 

அத்துடன் ஏனைய இலங்கை அரசியல் தலைவர்களும் கச்சத்தீவை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று பேசி வருகின்றனர். இந்நிலையில், சென்னை வந்துள்ள இலங்கை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது: கச்சத்தீவு இலங்கைக்கு தான் சொந்தமானது. உலகத்திற்கும் மக்களுக்கும் நன்றாகவே தெரியும். அரசியலுக்காக இதுகுறித்து பேசும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இந்த உண்மையை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

ஐயப்ப யாத்திரைக்கு இலங்கை அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இலங்கையில் இருந்து ஆண்டு தோறும் 20 ஆயிரம் பக்தர்கள் கேரளா சபரிமலை வருகிறார்கள். ஐயப்ப யாத்திரையை புனித யாத்திரையாக அங்கீகரிக்க கோரி 50 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர் என்று குறிப்பிட்டுள்ளார். எது எப்படியோ.. தமிழக அரசியலை தாண்டியும் இலங்கை அரசியலிலும் விஜய்யின் மதுரை தமிழக வெற்றிக் கழக மாநாடு பேசவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sri Lankan Minister Sundralingam Pradeep says Katchatheevu belongs to us


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->