'' கிறிஸ்தவ கொள்கைக்கும், திராவிட கொள்கைக்கும் வித்தியாசம் கிடையாது,'' உதயநிதி பேச்சு..!
Udhayanidhi says there is no difference between Christian ideology and Dravidian ideology
மதுரையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், '' கிறிஸ்தவ கொள்கைக்கும், திராவிட கொள்கைக்கும் வித்தியாசம் கிடையாது'' என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் தன் மீது காட்டும் தனி பிரியம் தனிப் பாசம் தன்னை மிகவும் நெகிழச் செய்கிறதாகவும், இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வராக, திமுக இளைஞரணி செயலராக பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று பேசியுள்ளார்.
மேலும், கிறிஸ்தவ கொள்கைக்கும், திராவிட கொள்கைக்கும் வித்தியாசம் கிடையாது. இரண்டுமே எல்லா நேரத்திலும் மனிதநேயம், அன்பு, சகோதரத்துவத்தை போதிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், உயர்ந்த கொள்கையான இரக்கத்தை போதிப்பது கிறிஸ்தவம் என்றும், அதையே திராவிடமும் கூறுகிறது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், சாதாரணமானவர்கள் உழைத்தால் உயரலாம் என்பதை நிரூபித்து காட்டியது திராவிட இயக்கம். இதற்கு உதாரணம் ஈவெ ராமசாமி, அண்ணாதுரை ,கருணாநிதி என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய ஆட்சியாளர்களுக்கு தமிழகம், தமிழக மக்கள் மீது பயம் உள்ளதாகவும், எல்லா மக்களும் ஒன்று சேர்ந்துவிடுவார்களோ, நமது அதிகாரம் பறிபோய் விடுமோ என்ற பயம் அவர்களுக்கு உள்ளது என்று பேசியுள்ளார். மேலும், ஜாதி, மதம் பெயரால் வெறுப்புணர்வை வேண்டும் என்றே அவர்கள் பரப்புவதாகவும், எவ்வளவு முயற்சி செய்தாலம் தமிழகத்தில் பிரித்தாளும் சூழ்ச்சி வெற்றி பெறாது என்று உதயநிதி பேசியுள்ளார்.
English Summary
Udhayanidhi says there is no difference between Christian ideology and Dravidian ideology