வீரர்கள் ஊக்கமருந்து பயன்பாடு; முதலிடம் பிடித்து மோசமான ஹாட்ரிக் சாதனை படைத்துள்ள இந்தியா..! - Seithipunal
Seithipunal


விளையாட்டு போட்டியின் போது வீரர்கள் நியாயமான முறையில் பங்கேற்க சுதேய்வதோடு, திறமையான விளையாட்டு வீரர்கள் வாகை சூடுவதையும் உறுதி செய்வதாக WADA அமைப்பு செயல்பட்டு வருகிறது. சர்வதேச மற்றும் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெறும் போட்டிகளில் பங்குபெறும் வீரர்களிடம் இருந்து மாதிரிகளை சேகரித்து அவர்கள் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகள் எதையேனும் எடுத்துக் கொண்டிருக்கிறார்களா என்பதை இந்த அமைப்பு ஆய்வு செய்யும்.

குறித்த அமைப்பின் ஆய்வின் போது வீரர் ஊக்கமருந்து எடுத்துக்கொண்டது உறுதிசெய்யப்பட்டிருந்தால் அவர்களை போட்டியில் இருந்து நீக்கவும். அவர்கள் போட்டியில் வெற்றிபெற்று பரிசுப்பெற்றிருந்தாலும், அவர்களது வெற்றியை ரத்து செய்யக்கோரியும், விளையாட்டை நடத்தும் அமைப்பிடம் பரிந்துரை செய்யும்.

அதன்படி, இந்த அமைப்பின் பரிந்துரையின் பேரில் ஊக்கமருந்து எடுத்துக்கொண்ட விளையாட்டு வீரர் போட்டியிலிருந்து நீக்கம் செய்வதோடு, அவர்கள் தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் விளையாட தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதோடு, அவர்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்படும்.

கடந்த 16-ஆம் தேதி (செவ்வாய்கிழமை) அன்று 2024 ஆம் ஆண்டிற்க்கான வருடாந்திர அறிக்கையை WADA அமைப்பு வெளியிட்டது. அதில் ஊக்கமருந்து எடுத்துக்கொண்டவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

WADA அமைப்பு வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 2024-ஆம் ஆண்டு 260 இந்திய விளையாட்டு வீரர்கள் செயல்திறனை அதிகரிக்கும் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளைப் பயன்படுத்தியதாக சோதனையில் தெரிய வந்துள்ளது.

அதனபடி, கடந்தாண்டு மட்டும் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (NADA) அமைப்பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நடத்தப்பட்ட 7,113 சோதனைகளில் 260 மாதிரிகள் ஊக்கமருந்து பயன்படுத்தியதை உறுதி செய்யப்பட்டது.  அதன் அடிப்படையில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்தியவர்களின் பட்டியலில் 260 பேர் கொண்ட நாடாக  இந்தியா மோசமான சாதனையை படைத்துள்ளது. 

கடந்த 2023-ஆம் ஆண்டிற்க்கான தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்தியவர்களின் பட்டியலிலும்  இந்தியா 213 பேர் என்ற எண்ணிக்கையில் முதலிடத்தில் இருந்தது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக WADA அமைப்பு வெளியிடும் ஆண்டறிக்கையில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்தியவர்களின் நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India has set a dubious record by topping the list in the use of performance enhancing drugs by athletes


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->