எச்.ராஜா நடிப்பில் உருவாகியுள்ள 'கந்தன் மலை' திரைப்படம் யூடியூபில் வெளியீடு..!
H Raja announced that the film Kandhan Malai will be released on YouTube
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்குகள் மற்றும் இந்துக்கள் போராட்டம் என தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு முன்னதாக திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவை அகற்ற வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் நடத்தின. அப்போது 'திருப்பரங்குன்றம் என்பது கந்தர் மலை, அது சிக்கந்தர் மலை அல்ல என்று' எச். ராஜா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தை மையமாக வைத்து கந்தன் மலை என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். இதில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த கந்தன் மலை படத்தில் எச் ராஜா, முறுக்கு மீசையுடன் கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், கந்தன்மலை திரைப்படம் நாளை (டிசம்பர் 19) தாமரை யூடியூப் சேனலில் வெளியாகவுள்ளதாக எச் ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
English Summary
H Raja announced that the film Kandhan Malai will be released on YouTube