'திமுக தீய சக்தி என்பது ஊரறிந்த ஒன்று'; அது அவர்களின் அடையாளம்; அண்ணாமலை..!
Annamalai says that the DMK being an evil force is something everyone knows
இன்று ஈரோடு மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அக்கட்சியில் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நடத்தினார் . அப்போது திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி என கடுமையாக திமுகவை விமர்சித்து பேசினார்.
இந்த தீய சக்தி திமுக விவகாரம் தற்போது பேசும் பொருளாகியுள்ளதோடு. சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், விஜய்யை போன்றே ''திமுக தீயசக்தி என்பதை எம்ஜிஆர், ஜெயலலிதா முன்னரே கூறிவிட்டனர். தீய சக்தி என்பது திமுகவின் அடையாளம்,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
திருப்பூரில் நிருபர்களிடம் பேசிய அண்ணாமலை மேலும், கூறியதாவது: 'திமுக தீய சக்தி என எம்ஜிஆர், ஜெயலலிதா முன்னரே சொல்லிவிட்டனர். அக்கட்சி தீய சக்தி என நீண்ட காலமாக பாஜவும் சொல்லி வருகிறது. தீய சக்தி தான் திமுக.' என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், திமுகவை தீயசக்தி என வீட்டில் இருக்கும் பெண்மணி சொல்கிறார். இது தான் முக்கியம் என்றும், இந்த சினிமா ஸ்டார் சொல்றாங்க, பெரிய அரசியல் தலைவர் சொல்றாங்க. பெரிய உயரத்தில் இருக்கிறவர் சொல்றாங்க என்பதை விட வீட்டில் இருக்கும் சாதாரண பெண்மணி, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் சொல்வதை நான் கேட்கிறேன். இது பெரிய வார்த்தை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சாமானிய அடித்தட்டு மக்களும் திமுகவை தீய சக்தி என்கின்றனர். இது ஓட்டு இயந்திரத்தில் ஓட்டுக்களாக மாறும் என்றும், திமுக தீய சக்தி என்பது ஊரறிந்த ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார். .இதை யாரோ (விஜய்) மேடையில் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், எம்ஜிஆர் எப்போவோ சொல்லிவிட்டார். தீய சக்தி என்ற வார்த்தை திமுகவின் அடையாளம். இதில் மாற்றுக் கருத்து இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Annamalai says that the DMK being an evil force is something everyone knows