சூதாட்ட உலக கதை... பிரபல நடிகர் குழுவில் புதிய நடிகை இணைப்பு…! - ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகம்!
Gambling world story New actress joins famous cast Fans expecting lot
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான 'துல்கர் சல்மான்', அண்மையில் வெளியான 'காந்தா' படத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இதன் வெற்றிக்கு பின்னர், துல்கர் தற்போது 'ஐ அம் கேம்' என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை பிரபல இயக்குநர் 'நஹாஸ் ஹிதாயத்' இயக்குகிறார்.மேலும், படத்தின் கதைக்களம் சூதாட்ட உலகத்தைச் சுற்றி உருவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் மற்றும் இயக்குனர் 'மிஷ்கின்' முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, கதையை மேலும் சிறப்பித்துள்ளார்.
அதுமட்டுமின்றி,சண்டை காட்சிகளை இயக்கியவர் அன்பறிவு; கதிர், ஆண்டனி வர்கீஸ் பிபி போன்ற நட்சத்திரங்கள் கூட முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மேலும், நடிகர் துல்கர் சல்மானின் 'வே பாரர் நிறுவனம்' தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, படக்குழு தற்போது பிரபல நடிகை 'காயடு லோஹர்' இப்படத்தில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளது. இது ரசிகர்களிடையே சற்று எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
English Summary
Gambling world story New actress joins famous cast Fans expecting lot