சாதாரண மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கும், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு நோக்கமாக ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்கிறார் பிரதமர் மோடி..!
Prime Minister Modi says the plan for GST reforms has been prepared with the aim of making the lives of the common man easier and strengthening the economy
நாட்டின் 79 வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி ஜிஎஸ்டி சீர்திருத்தம் செய்யப்படும் என அறிவித்து இருந்தார். அதன்படி, திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இன்று டில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் அனைத்து மாநில நிதியமைச்சர்களும் பங்கேற்றனர்.
இதன்போது செய்யலர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளதாவது: வரி அடுக்குகளை குறைத்துள்ளோம். இனிமேல் இரண்டு அடுக்குகள் தான் இருக்கும் என்றும், செஸ் வரி இழப்பீடு குறித்து ஆலோசித்து வருகிறதாகவும்,பொருளாதார வளர்ச்சிக்கான காரணிகளுக்கு ஊக்கமளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அடுத்த தலைமுறை சீர்திருத்தத்துக்கு பிரதமர் மோடி குரல் கொடுத்த நிலையில் அவருக்கும் நிர்மலா நன்றி தெரிவித்துக் கொண்டார். ஜிஎஸ்டி சீர்திருத்தம் சாமானிய மக்களுக்கு பலனளிக்க வேண்டும் என பிரதமர் மோடி விரும்பியவாறு, விவசாயிகள் மற்றும் விவசாயத்துறை, மருத்துவ துறைக்கு நல்ல பலன் கிடைக்கும். சாமானிய மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், சீர்திருத்தப்பட்ட ஜிஎஸ்டி குறைப்பு குறைத்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
'எனது சுதந்திர தின உரையின் போது, ஜிஎஸ்டியில் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான எங்கள் நோக்கம் குறித்து நான் பேசியிருந்தேன்.
சாதாரண மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதையும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பரந்த அளவிலான ஜிஎஸ்டி விகித பகுத்தறிவு மற்றும் செயல்முறை சீர்திருத்தங்களுக்கான விரிவான திட்டத்தை மத்திய அரசு தயாரித்திருந்தது.
சாதாரண மக்கள், விவசாயிகள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில், ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து மத்திய அரசு சமர்ப்பித்த திட்டங்களுக்கு மத்திய அரசு மற்றும் மாநிலங்களை உள்ளடக்கிய
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கூட்டாக ஒப்புக்கொண்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பரந்த அளவிலான சீர்திருத்தங்கள் நமது குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் மற்றும் அனைவருக்கும், குறிப்பாக சிறு வணிகர்கள் மற்றும் வணிகங்களுக்கு வணிகம் செய்வதை எளிதாக்கும்.' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Prime Minister Modi says the plan for GST reforms has been prepared with the aim of making the lives of the common man easier and strengthening the economy