சட்டமன்ற தேர்தலுக்கான அடுத்தகட்ட நகர்வு...! - தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தேதியை வெளியிட்ட தி.மு.க...! - Seithipunal
Seithipunal


தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டதாவது, "வருகிற 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் களப்பணிகள் வேகமெடுத்து இருப்பதை தெளிவாக காட்டுகிறது. தேர்தல் காலம் இன்னும் இருந்தாலும், தொண்டர்கள் ஏற்கனவே “வெற்றிக்கான போராட்டம்” என்ற மனநிலையுடன் மாவட்டம் தோறும் சுற்றிச் சுழன்று பணியில் இறங்கியுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தப் பணிகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.இந்த பணிகளில் மாவட்டச் செயலாளர்கள் முதல் நாடாளுமன்ற, சார்பு அணியினர், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள், பகுதி–நகர–ஒன்றிய நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் என லட்சக்கணக்கானோர் களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றனர்.

‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை இயக்கம், ‘என் வாக்குச்சாவடி- வெற்றி வாக்குச்சாவடி’ திட்டம், இளைஞரணி மற்றும் மகளிரணி மண்டல மாநாடுகள் என அடித்தளத்தை வலுப்படுத்தும் பணிகள் தொடர் வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

அடுத்து, “வெல்லும் தமிழ்பெண்கள்” என்ற பெயரில் வீடு தோறும் சென்று மக்களுடன் நேரடி தொடர்பு ஏற்படுத்த மகளிர் படை தயாராகி வருகிறது. அதோடு வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாடுகள், திருச்சியில் நடைபெறவுள்ள “ஸ்டாலின் தொடரட்டும்,தமிழ்நாடு வெல்லட்டும்” மாபெரும் கூட்டம் ஆகியவை தேர்தல் சூழலை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.

ஒருபுறம் தீவிர களப்பணி, மறுபுறம் திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்கள் என இரட்டை வேகத்தில் செயல்பட்டு வருவதாக கட்சி தெரிவிக்கிறது.மேலும், தேர்தல் அறிக்கைக்கான சிறப்பு குழு அமைக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் எதிர்பார்ப்புகளை சேகரித்து வருகிறது.

இதுவரை மட்டும் 75 ஆயிரம் கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இதனிடையே, வரும் 17ஆம் தேதி இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

மேலும், சட்டப்பேரவை பணிகள் நிறைவடைந்ததும், பிப்ரவரி 22 முதல் தி.மு.க. தொகுதி பங்கீட்டுக் குழு தோழமை கட்சிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும், குறிப்பாக காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கோரிக்கைக்கு பதிலாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Next move assembly elections DMK announces date seat sharing talks


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->