தமிழ் சினிமாவில் தடம் பதிக்கும் சி.எஸ்.கே. முன்னாள் வீரர் - யார் தெரியுமா?
ex cricket player suresh raina act in tamil cinema
இளைஞர்கள் அதிகளவில் விரும்பும் விளையாட்டில் ஒன்று கிரிக்கெட். அதிலும் குறிப்பாக இந்த விளையாட்டில் விளையாடும் வீரர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில், ரசிகர்களால் "சின்ன தல" என்று அன்புடன் அழைக்கப்படுபவர் சுரேஷ் ரெய்னா. இந்திய கிரிக்கெட்டுக்கு தனது பங்களிப்பை வழங்கியுள்ள இவர், ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடியதனால் தமிழ் ரசிகர்களுக்கு சுரேஷ் ரெய்னாவை மிகவும் பிடிக்கும்.
இந்த நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா, தமிழ் சினிமாவில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி சுரேஷ் ரெய்னா டிரீம் நைட் ஸ்டோரீஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ள முதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

லோகன் என்பவர் இயக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தின் அறிவிப்பு காணொளியை சிவம் தூபே வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னா வீடியோ கால் மூலம் நிகழ்வில் இணைந்து பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
இந்த படவாய்ப்புக் குறித்து, சுரேஷ் ரெய்னா தெரிவிக்கையில், "தமிழ்நாட்டில்தான் "விசில் போடு" ஆர்மி இருக்கிறது. பல கிரிக்கெட் போட்டிகளில் இங்கு ஆடியிருக்கிறேன். ரசம், சென்னை கடற்கரை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான் தமிழில் நடிக்கிறேன். மக்களின் அன்பும் எனக்குக் கிடைத்திருக்கிறது" என்றுத் தெரிவித்தார்.
English Summary
ex cricket player suresh raina act in tamil cinema