த்ரிஷாவுக்கு திருமணமா? 25 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய அத்தியாயம் தொடங்கப் போகிறதா?சினிமாவில் தீயாக பரவும் செய்தி!
Is Trisha getting married Is a new chapter about to begin after 25 years News that is spreading like wildfire in cinema
திரையுலகில் நடிகைகளின் வாழ்க்கை குறுகியதாக இருக்கும் என்ற பொதுவான நம்பிக்கையை உடைத்து, 25 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நட்சத்திரமாக திகழ்கிறார் திரிஷா கிருஷ்ணன். 1999-ல் தனது பயணத்தைத் தொடங்கிய இவர், இன்று வரை தனது கவர்ச்சியும் நடிப்புத் திறமையாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.
சமீபத்தில், சமூக வலைதளங்களில் திரிஷாவின் திருமணம் குறித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1983-ஆம் ஆண்டு மே 4-ஆம் தேதி சென்னையில் பிறந்த திரிஷா, மாடலிங்கின் மூலம் தனது கரியரைத் தொடங்கினார். "மிஸ் சேலம்", "மிஸ் சென்னை" பட்டங்களை வென்ற இவர், 2001-ஆம் ஆண்டு "மிஸ் இந்தியா" போட்டியில் "பியூட்டிஃபுல் ஸ்மைல்" விருதைப் பெற்றார்.
திரைப்பட உலகில் 1999-ஆம் ஆண்டு ஜோடி படத்தின் மூலம் அறிமுகமான அவர், பின்னர் தெலுங்கு படம் உன் மனசு எனக்கு தெரியும் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து, தென்னிந்திய திரையுலகின் பிரபல முகமாக உயர்ந்தார்.
ஒரு கட்டத்தில், வாய்ப்புகள் குறைந்ததால் திருமணம் செய்து கொண்டு தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தலாம் என நினைத்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஒரு தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் நடந்திருந்தாலும், அந்த திருமணம் பிறகு ரத்து செய்யப்பட்டது. ஆனால் அதையெல்லாம் மீறி, திரிஷா தனது இரண்டாவது இன்னிங்ஸை அதிரடியாக தொடங்கினார்.
‘பொன்னியின் செல்வன்’, ‘தி ரோடு’, ‘லியோ’, ‘கோட்’, ‘ஐடென்டிட்டி’, ‘விடாமுயற்சி’, ‘தக் லைஃப்’ போன்ற படங்களில் நடித்த அவர், தற்போது ‘விஸ்வம்பரா’, ‘சூர்யா 45’, ‘ராம்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், திரிஷாவின் திருமணம் குறித்த புதிய வதந்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்த திருமணத்திற்கு திரிஷா சம்மதித்ததாகவும், அவரது வருங்கால கணவர் பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகரைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. அவர் ஆஸ்திரேலியாவில் பல வணிகங்களை நடத்தி வருவதுடன், இந்தியாவிலும் தனது வியாபாரத்தை விரிவாக்கியுள்ளார்.
மேலும், இரு குடும்பங்களும் நெருக்கமாக இருப்பதால், விரைவில் திருமண அறிவிப்பு வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கோலிவுட் நடிகர் தளபதி விஜய்யுடன் திரிஷாவுக்கு நெருக்கம் இருப்பதாக முன்பு பரவிய வதந்திகள் மீண்டும் நினைவில் வருகின்றன. இதற்கு முன்னர், விஜய்யுடன் தன்னிடம் உள்ள நட்பை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என தனது இன்ஸ்டாகிராமில் திரிஷா மறைமுகமாக பதிலளித்திருந்தார்.
மொத்தத்தில், 25 ஆண்டுகளாக திரையுலகில் ஒளிரும் திரிஷா தற்போது தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கப் போகிறார் என ரசிகர்கள் உற்சாகமாகக் காத்திருக்கின்றனர். ஆனால், இந்த செய்திக்கு திரிஷா அதிகாரப்பூர்வமாக பதில் அளிப்பாரா என்பது தான் ரசிகர்களின் கேள்வி.
English Summary
Is Trisha getting married Is a new chapter about to begin after 25 years News that is spreading like wildfire in cinema