அண்ணா நினைவுநாள்: ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட அமைதிப் பேரணி! - மெரினாவில் அஞ்சலி - Seithipunal
Seithipunal


பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவுநாளை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை நகரம் முழுவதும் கவனத்தை ஈர்த்த பிரமாண்ட அமைதிப் பேரணி நடைபெற்றது.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு முதலில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதலமைச்சர், அங்கிருந்து அண்ணா சதுக்கம் நோக்கி பேரணியை தொடங்கினார்.

இந்த பேரணியில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஏராளமான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டு ஒற்றுமையை வெளிப்படுத்தினர். எம்.பி.க்கள் தயாநிதி மாறன், ஆ.ராசா மற்றும் அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு உள்ளிட்ட பலர் முன்னணியில் நடந்தனர்.

பின்னர், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தை சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு மற்றும் எம்.பி.க்கள் மலர்தூவி மரியாதை தெரிவித்தனர்.

அண்ணா நினைவிட அஞ்சலிக்குப் பிறகு, கலைஞர் நினைவிடத்திற்கும் சென்று முதலமைச்சர் மரியாதை செலுத்தி தனது அஞ்சலியை நிறைவு செய்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Anna death anniversary ​​grand silent procession led by Stalin Tributes paid at Marina


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->