தாறுமாறாக உயரப்போகும் தங்கம் விலை.. கையை மீறிப்போக போகுது!அமெரிக்கா எடுத்த முடிவு! - Seithipunal
Seithipunal


அமெரிக்க மத்திய வங்கியான Federal Reserve எடுத்துள்ள புதிய முடிவு, உலகளாவிய பொருளாதார சந்தைகளில் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. வட்டி விகிதங்களை குறைக்க உள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளதால், தங்கத்தின் விலை அடுத்த சில வாரங்களில் வேகமாக உயர வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க அதிகாரிகள் உறுதியாக வட்டி குறைப்பு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். ஆனால் — எத்தனை முறை குறைக்கப்படும் என்பதில் மட்டுமே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. சிலர் இரண்டு முறை, சிலர் மூன்று முறை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். முதற்கட்டமாக 0.5 சதவிகிதம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, Federal Fund Rate 4.25% முதல் 4.5% என்ற அளவிலேயே ஆறாவது முறையாக தக்கவைக்கப்பட்டுள்ளது. இது தற்காலிகமான முடிவு என்றாலும், இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத தொடக்கத்திலோ வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று பொருளாதார வட்டாரங்கள் நம்புகின்றன.

ஃபெடரல் ரிசர்வ் வெளியிட்ட கணிப்புகளின்படி, 2025ஆம் ஆண்டு 50 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி குறைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 2026க்கான கணிப்பு 25 புள்ளிகளாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இதுவரை ஒரு அடிப்படை புள்ளி கூட குறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டால், முதலீட்டாளர்கள் அமெரிக்க சேமிப்பு பத்திரங்களில் பெறும் வருமானம் குறையும். இதனால் அவர்கள் டாலரை விட்டு விலகி, தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்குவார்கள். இதுவே தங்கத்தின் விலையை மேலும் உயர்த்தும் முக்கிய காரணமாகும்.

தற்போதைய நிலையில், வட்டி விகிதங்கள் மாறாமல் இருப்பதும், அமெரிக்க டாலர் மதிப்பில் நிலைத்தன்மை இல்லாமையும், தங்க விலையை மெதுவாக மேலே தள்ளி வருகிறது.

அதோடு, மத்திய கிழக்கில் நிலவும் ஈரான் – இஸ்ரேல் மோதல், ரஷ்யா – உக்ரைன் போர், மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வரவிருக்கும் வரி கொள்கை குழப்பங்கள் ஆகியவை, உலக சந்தைகளில் புதிய பதட்டத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த புவிசார் அரசியல் திடீர் மாற்றங்களால், உலக நாடுகள் பாதுகாப்பான முதலீடுகளுக்காக தங்கத்தை நோக்கி திரும்பியுள்ளன. அதன் விளைவாக, சர்வதேச தங்க சந்தையில் விலை நான்காவது நாளாக தொடர்ச்சியாக உயர்ந்து, கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது.

நிபுணர்கள் கூறுவது:“அமெரிக்கா எடுத்துள்ள வட்டி குறைப்பு முடிவு, உலகளாவிய தங்க சந்தைக்கு பெரிய ஆதாரமாக மாறும். இந்த ஆண்டு முழுவதும் தங்கம் விலை பறக்கும் வாய்ப்பு உள்ளது.”எனவே, முதலீட்டாளர்கள் தங்கத்தில் தங்களது கவனத்தை திருப்பும் நேரம் இது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gold prices are about to rise dramatically It going to get out of hand! The decision taken by the US


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->