இரவுப் பகலாக வேலை செய்தும் நடிப்பேன்! -ஸ்ரீநிதி ஷெட்டியின் ஹீரோயின் ஸ்டைல் பதில் வைரல்
I work day and night and act Srinidhi Shettys heroine style response goes viral
கேஜிஎப் படத்தின் மூலம் திரையுலகில் காலடி வைத்த ஸ்ரீநிதி ஷெட்டி, தனது அறிமுகத்திலேயே பெரும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றார். அந்த வெற்றியின் பின், அண்மையில் நடிகர் நானியுடன் நடித்த ‘ஹிட் 3’ திரைப்படமும் வெற்றி பெற்றது, இதனால் ஸ்ரீநிதியின் மார்க்கெட் மேலும் உயர்ந்துள்ளது.
இந்த தொடர்ச்சியான ஹிட்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் ஸ்ரீநிதி, தற்போது ‘தெலுசு கடா’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். நடிகர் சித்து ஜோன்னலகடா கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம் வரும் 17ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்த படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ஸ்ரீநிதி புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.அப்போது நடைபெற்ற ஒரு நேர்காணலில் அவரிடம் சுவாரஸ்யமான கேள்வி கேட்கப்பட்டது.
“மகேஷ் பாபு மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் யாரை தேர்வு செய்வீர்கள்?” என்றதற்கு ஸ்ரீநிதி சிரித்தபடி,“நான் ஏன் அந்த வாய்ப்புகளை நிராகரிக்க வேண்டும்? இருவருடனும் நடிக்கலாம்! தேவையானால் இரவும் பகலும் வேலை செய்வேன்!” என்று தன்னம்பிக்கையுடன் பதிலளித்தார்.அவரது இந்த பதில் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
English Summary
I work day and night and act Srinidhi Shettys heroine style response goes viral