17 புதிய நுழைவு! வெளியேறும் நிலையங்கள்! - சென்னையில் மெட்ரோ பயணத்துக்கு புதிய முகம் - Seithipunal
Seithipunal


சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை மேலும் நவீனமயமாக்கப்பட உள்ளது. அதில் 2ம் கட்டத்தின் முக்கியமான வழித்தடம்-3 திட்டத்தில், மொத்தம் 17 நுழைவு மற்றும் வெளியேறும் கட்டமைப்புகளை அமைக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.இந்த பெரும் பணியை மேற்கொள்ளும் பொறுப்பு, Bridge and Roof Company (India) Limited நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு ரூ.250.47 கோடி (ஜிஎஸ்டி உட்பட) என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நவீன நுழைவு-வெளியேற்ற கட்டமைப்புகள் நேரு நகர், துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், கந்தன்சாவடி, பெருங்குடி, PTC காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம் மற்றும் ஒக்கியம் துரைப்பாக்கம் ஆகிய உயர்மட்ட மெட்ரோ நிலையங்களில் உருவாக்கப்படவுள்ளன.இந்த ஒப்பந்தத்தின் கீழ், சிவில் கட்டுமானப் பணிகள், நிலையங்களின் வடிவமைப்பு மற்றும் அலங்காரங்கள், மேலும் தொடர்புடைய அனைத்து உள்கட்டமைப்பு பணிகளும் அடங்கும்.

இதோடு, மெட்ரோ நிலையங்களின் நுழைவு/வெளியேறும் பகுதிகளில் வணிக வளாகங்கள், கடைகள் போன்ற போக்குவரத்து மையப்படுத்திய சொத்து மேம்பாட்டுத் திட்டங்களும் (Transit Oriented Development - TOD) உருவாக்கப்படவுள்ளன.இந்த முயற்சியின் மூலம், சென்னை மெட்ரோ நிறுவனம் பயணச்சீட்டு வருவாயைத் தவிர்த்து கூடுதல் நிதி வருவாயையும் (Non-Farebox Revenue) ஈட்டும் வாய்ப்பு பெறுகிறது.

இந்த ஒப்பந்தம், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் இ.ஆ.ப. அவர்களின் முன்னிலையில் கையெழுத்தாகியது.நிறுவனத்தின் சார்பாக திட்ட இயக்குநர் தி. அர்ச்சுனன் மற்றும் Bridge and Roof நிறுவனத்தின் சார்பாக பொது மேலாளர் டி. ரவி கையெழுத்திட்டனர்.இந்த நிகழ்வில் சென்னை மெட்ரோவின் தலைமை பொது மேலாளர்கள் டி. லிவிங்ஸ்டோன் எலியாசர் (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), டாக்டர் டி. ஜெபசெல்வின் கிளாட்சன் (ஒப்பந்தம் மற்றும் கொள்முதல்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

17 new entry and exit stations new face metro travel Chennai


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->