கரூர் நெரிசல் விபத்து! மூன்று முகாம்களில் அதிரடி விசாரணை....! - உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்மான நாள்
Karur traffic accident Investigation underway three camps Supreme Court to decide today
கரூரில் நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கொடூர நெரிசல் விபத்தில் உயிரிழந்த 41 பேரின் மரணம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த பெரும் விபத்துக்குப் பின்னணியை வெளிக்கொணர வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு, கடந்த 5ஆம் தேதி முதல் கரூர் தாந்தோணிமலை அரசு சுற்றுலா மாளிகையில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

புலனாய்வு குழுவினர் மூன்று பிரிவாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் ஒரே இடத்தில் இருந்த விசாரணை முகாம், தற்போது மூன்று முக்கிய தளங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது
தாந்தோணிமலை அரசு சுற்றுலா மாளிகை
அதற்கருகில் உள்ள அரசு கட்டிடம்
கரூர் மாவட்டம் புகழூரில் அமைந்துள்ள டி.என்.பி.எல் வளாகம்
இந்த 3 இடங்களிலும், குழுவினர் சாட்சிகள், ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்தவர்களிடம் தீவிரமாக வாக்குமூலங்கள் பதிவு செய்து வருகின்றனர்.இதற்கிடையில், உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனங்களின் உரிமையாளர்கள் 10 பேரில் முதல் கட்டமாக 7 பேர் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தனர்.
இதில் நேற்று மீதமிருந்த 3 பேரும் ஆஜராகியதுடன், அவர்களிடமும் விசாரணை நிறைவடைந்ததாக காவலர்கள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதேவேளை, சிறப்பு புலனாய்வு குழு அமைப்புக்கு எதிராக த.வெ.க. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.இதனால், கரூர் நெரிசல் விபத்து வழக்கு மீண்டும் அரசியல் மற்றும் நீதித்துறையின் மையப்புள்ளியாக மாறியுள்ளது.
English Summary
Karur traffic accident Investigation underway three camps Supreme Court to decide today