வைரலான கல்யாண போட்டோ... “திருமணம் செய்யல… பொய்யான தகவல்!” – பிக் பாஸ் திவாகர் முதன்முறையாக விளக்கம்! - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆன பிறகு, வாட்டர்மிலன் ஸ்டார் திவாகரைச் சுற்றி “திருமணம் செய்துவிட்டார்” என்ற வதந்தி பரவியது. அவரது கல்யாண புகைப்படங்கள் எனச் செல்லும் சில படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இந்த விவகாரம் குறித்து திவாகர் முதன்முறையாகத் தெளிவான விளக்கமளித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற திவ்யா திரைப்பட முன்னோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற திவாகர், படத்தைப் பார்த்தபின் செய்தியாளர்களை சந்தித்து பல கேள்விகளுக்கும் பதில் அளித்தார். திவ்யா படம் குறித்து அவர்,“புது முகங்களே நடித்திருந்தாலும் சசிகுமார் அண்ணன் எடுத்த நந்தன் படத்தைப் போன்ற உணர்வு தந்தது. இப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும்,” என்று பாராட்டினார்.

பிக் பாஸ் அனுபவத்தைப் பற்றி திவாகர் பேசுகையில்,“பிக் பாஸ்-scripted என்று வெளியில் நினைக்கிறார்கள். ஆனால் உள்ளே எதுவும் ஸ்கிரிப்ட் இல்லை. எங்களை உள்ளே அடைத்து விட்டு, அவர்கள் சொல்லும் டாஸ்கை மட்டும் செய்து கொண்டே இருப்போம். அங்கே சாப்பாட்டே குறைவாக இருக்கும். வீட்டுப்பணிகள் எல்லாம் அங்கேயே கற்றுக்கொண்டேன் — பாத்திரம் கழுவுவது முதல் டாய்லெட் கிளீன் செய்வது வரை,” என்று உண்மைகளை பகிர்ந்தார்.

மேலும்,“பிக் பாஸில் இருந்து நான் வெளியேறியபோது குழந்தைகள் நிறைய பேர் அழுதுட்டாங்க. ‘நடிப்பு அரக்கன்’ன்னு மக்கள் வைரலாக்கினார். டைட்டில் யார் வெல்லப் போகிறார்கள் என்பது இப்போ சொல்ல முடியாது. வைல்டு கார்டு உள்ளே போனால் கேம் முழுக்க மாறி விடும்,” என்றார்.

அதிகமாக பேசப்படும் திருமண புகைப்படங்கள் குறித்து திவாகர் தன் சமூக வலைதளத்தில் உறுதியாக விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியது:

நான் சிங்கிள்தான். 3 பெண்களையெல்லாம் திருமணம் செய்துவிட்டேன் என்பது முழுக்க பொய்யான தகவல். சில யூடியூபர்கள் தவறான செய்திகளை பரப்புகிறார்கள். இனிமேல் என்னைப் பற்றி இப்படிப் பொய்யான தகவல் வெளியிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பேன். பிக் பாஸுக்கு சென்ற பிறகு எனக்கு ரசிகர்கள் அதிகரித்ததால், எனக்கு கெட்ட பெயர் வரச் செய்ய சிலர் இப்படிச் செய்கிறார்கள்” என்று திவாகர் குற்றம் சாட்டியுள்ளார்.

திவாகரின் இந்த தெளிவான பதில், சமூக வலைதளங்களில் பரவியிருந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Viral wedding photo Donot get married False information Bigg Boss Diwakar explains for the first time


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->