'இந்தியா ஒருபோதும் பயங்கரவாதத்துக்கு தலை வணங்காது; அதில் சமரசமும் இல்லை'; குருஷேத்ராவில் மோடி ..!
Modi in Kurukshetra says India will never bow to terrorism
ஹரியானா மாநிலம், குருசேத்திரத்தில் சீக்கிய மத குரு தேஜ் பஹதூரின் சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலை வெளியிடும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:
இன்று இந்தியாவின் பாரம்பரியத்தின் அற்புதமான நாள். காலை அயோத்தியில் இருந்தேன். மாலை, பகவத் கீதை நகரமான குருசேத்திரத்தில் இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீ குரு தேஜ் பகதூரின் 350-வது தியாக நாளில் நாம் அனைவரும் இங்கு அஞ்சலி செலுத்துகிறோம். இந்த நிகழ்வில் நம்மிடையே இருக்கும் அனைத்து துறவிகளுக்கும் மரியாதை செலுத்துகிறேன் என்று மோடி பேசியுள்ளார்.

அத்துடன், 2019 நவம்பர் 09-இல் ராமர் கோவில் குறித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கிய போது நான் கர்தார்பூர் காரிடரில் உள்ள தேரா பாபா நானக் துவக்க விழாவில் இருந்ததாகவும், ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்ற கோடிக்கணக்கான மக்களின் விருப்பம் நிறைவேற வேண்டும் என வேண்டிக் கொண்டதாகவும் , அந்த வேண்டுதல் நிறைவேறியுள்ளது. அன்றே, ராமர் கோவிலுக்கு ஆதரவான தீர்ப்பு வந்தது என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அங்கு மோடி பேசுகையில்; இன்று அயோத்தி ராமர் கோவிலில் கொடியேற்றப்பட்ட நிலையில், சீக்கிய சமூகத்தினரிடம் இருந்து ஆசிகளை பெறும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது என்றும் கூறியுள்ளார்.சிறிது நேரத்துக்கு முன்பு, குருசேத்திரத்திர மண்ணில் பாஞ்சஜன்ய நினைவுச்சின்னம் திறக்கப்பட்டது. குருசேத்திர மண்ணில் நின்று தான், பகவான் கிருஷ்ணர் உண்மை மற்றும் நீதியைப் பாதுகாப்பதே மிகப்பெரிய மதம் என அறிவித்தார் என்பதை நினைவு கூர்ந்துள்ளார்.

அத்துடன், குரு தேஜ் பகதூரும் உண்மை, நீதி மற்றும் நம்பிக்கையை பாதுகாப்பதே தனது மதமாக கருதினார். அதற்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாம் அமைதியையே விரும்புகிறோம். பாதுகாப்பில் சமரசத்தை அல்ல. இதற்கு சிறந்த உதாரணம் 'ஆப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கை. அதேபோன்று பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் தலை வணங்காது அல்லது பயப்படாது என்பதை உலக நாடுகள் பார்த்தன என்று குருஷேத்ராவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
English Summary
Modi in Kurukshetra says India will never bow to terrorism