"லாக் அப் மரணங்களை நாடு பொறுத்துக் கொள்ளாது" - உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!
Custodial violence death Supreme Court condemn
காவல் நிலையங்களில் நிகழும் லாக் அப் மரணங்களை (Lockup Deaths) இந்த நாடு பொறுத்துக் கொள்ளாது என்று உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் நடப்பாண்டின் முதல் எட்டு மாதங்களில் மட்டும் 11 லாக் அப் மரணங்கள் நிகழ்ந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து (Suo Motu) விசாரணை மேற்கொண்டபோது இந்தக் கருத்தைத் தெரிவித்தது.
11 மரணங்களில், ராஜஸ்தானின் உதய்பூரில் மட்டும் 7 லாக் அப் மரணங்கள் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீதிபதிகளின் கருத்து: இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு, "லாக் அப் மரணங்கள் ஒரு நிர்வாகத்தின் மீதான கறை. காவலில் மரணங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று தெரிவித்தனர்.
மேலும், மனித உரிமை மீறல்களைத் தடுக்கக் காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று 2018-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் மேற்கோள் காட்டி, அது முறையாக அமல்படுத்தப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பினர்.
காவல் நிலைய மரணங்கள் குறித்து மாநில அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
Custodial violence death Supreme Court condemn