"திராவிடம் கற்பனையல்ல; ஆளுநர் பா.ஜ.க.வின் ஊதுகுழல்": அமைச்சர் ரகுபதி கண்டனம்!
dmk Minister Ragupathy condemn Governor RNRavi
'திராவிடம் என்பது கற்பனை' என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துக்கு திமுக அமைச்சர் எஸ். ரகுபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் மீதான விமர்சனம்
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி, ஆளுநரின் கருத்துகளை கடுமையாக கண்டித்து தெரிவித்தாவது, "தேசிய கீதத்திலேயே 'திராவிடம்' என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது என்பது ஆளுநருக்குத் தெரியாதா? 'திராவிடம் கற்பனை' என்று கூறுவது கண்டனத்துக்குரியது.
ஆளுநர் எங்கே சென்றாலும் தமிழர்களை இழிவுபடுத்துவதைத் தனது கொள்கையாக வைத்துள்ளார்.
ஆளுநர் ஒரு நடுநிலையாளராகச் செயல்படாமல், பா.ஜ.க.வின் ஊதுகுழலாகவே செயல்பட்டு வருகிறார். மொழி அச்சுறுத்தல்: தமிழ்நாட்டில் எந்த மொழிக்கும் அச்சுறுத்தல் கிடையாது.
புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு:
தமிழ்நாட்டில் இருக்கும் பீகாரிகள் அச்சுறுத்தப்படுவதாகக் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டார்கள். அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல.
தமிழ்நாடு தனித்து விடப்பட்டிருக்கிறது என்ற கருத்து சிறிதும் ஏற்கக்கூடியது அல்ல. தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் உறுதியுடன் இருக்கிறது.
English Summary
dmk Minister Ragupathy condemn Governor RNRavi