சென்னை பேருந்தில் புதிய வசதி...! பட்டன் போன் பயணிகளுக்கும் மாத பாஸ்...! -போக்குவரத்துத் துறை
New Feature Chennai Buses Monthly Passes Now Available Button Phone Users Too Department Transport
சென்னை மாநகரப் பேருந்துகளில் மாதாந்திரப் பயண அட்டை வழங்கும் மையங்களில், தற்போது ஆண்ட்ராய்டு அல்லாத 'பட்டன் போன்' வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பயண அட்டைகள் நேரடியாக வழங்கப்படுகின்றன.

பணமில்லாப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், 'சென்னை ஒன்' (Chennai One) செயலி மூலம் பயண அட்டைகளைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு பயணிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
தற்போது சுமார் 10 லட்சம் பேர் இந்தச் செயலியைப் பயன்படுத்தி வரும் நிலையில், மாநகரப் பேருந்து, மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களுக்கான பயண அட்டைகளை இதிலேயே பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், வழக்கமாக ரூ. 1,000 மற்றும் ரூ. 2,000 கட்டணத்தில் வழங்கப்படும் இந்த மாதாந்திரப் பயண அட்டைகள் மூலம் 70,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், டிஜிட்டல் முறையைப் பயன்படுத்தத் தெரியாத முதியவர்கள் மற்றும் சாதாரண செல்போன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே மையங்களில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
மற்ற பயணிகள் தங்களின் பயண அட்டைகளை ஆன்லைன் மூலமாகவே புதுப்பித்துக் கொள்ள வேண்டும் எனப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
New Feature Chennai Buses Monthly Passes Now Available Button Phone Users Too Department Transport