நடிகர் ரவி மோகன் வீட்டில் திருட்டு வழக்கில் ஓட்டுநர் கைது; விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
Driver caught in theft case at actor Ravi Mohans house
நடிகர் ரவி மோகன் இல்லத்தில் வைர நெக்லஸ் மற்றும் பணம் திருடு போனதாக நீலாங்கரை காவல் நிலையத்தில் நடிகர் ரவி மோகனின் தனி அலுவலக மேலாளர் கோகுல் புகார் அளித்து இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் CSR மட்டுமே பதிவு செய்திருந்திருந்த நிலையில், தற்போது போலீசார் FIR பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி கரூர் மாவட்டம், அச்சம்மாபுரம், திருமாகூடலூர் பகுதியை சேர்ந்த நடிகர் ரவி மோகனின் தனி ஓட்டுநரான ராஜேஷ் (33) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். நீலாங்கரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த அவரிடம், காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில் ராஜேஷ், நடிகர் ரவி மோகனிடம் தனிப்பட்ட வாகன ஓட்டுனராக கடந்த ஆறு மாதமாக வேலை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று நடிகர் ரவி மோகன் அறையில் இருந்த லாக்கரை திறந்து அதில் இருந்த ரூபாய் 2.50 லட்சம் பணத்தை எடுத்ததும் தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்த நீலாங்கரை போலீசார்ம் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
English Summary
Driver caught in theft case at actor Ravi Mohans house