''தவெகவில் இணைய எவ்வளவு வேண்டுமானாலும் பணம் தருகிறோம் என வற்புறுத்தினார்கள்; மறுத்ததால் கைது''; அனிதா ராதாகிருஷ்ணன் பகீர் குற்றசாட்டு..! - Seithipunal
Seithipunal


''தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைய வேண்டும். அதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் பணம் தருகிறோம் என தவெக தரப்பில் வற்புறுத்தினார்கள்” என பகீர் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் பகீர் குற்றசாட்டை கூறியுள்ளார். 

கடந்த 20 ஆம் தேதி திருச்செந்தூரில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசினார். அப்போது, முதலமைச்சர் விஜய் குறித்து அவர் ஒருமையிலும், அவதூறான வகையிலும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இது குறித்து தவெக நகரச் செயலாளர் செல்வம் அனிதா ராதாகிருஷ்ணன் மீது புகார் அளித்தார். அதன் அடிப்படையில், ஆத்தூர் காவல்துறையினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது 03 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்பிணை வழங்கக் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், குறித்தமனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்த ஒரு மணி நேரத்திலேயே அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் கைது செய்யப்பட்டார்.  தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு ஆய்வுக்காக அனிதா ராதாகிருஷ்ணன் சென்றிருந்தபோது, ஆறுமுகனேரி காவல் நிலைய ஆய்வாளர் ரெனிஸ் தலைமையிலான போலீசார் அவரை அங்கேயே வைத்து கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அப்போது அனிதா ராதாகிருஷ்ணன் தனது சொந்த வாகனத்தில் வர அனுமதி கோரிய நிலையில், காவல்துறையினர் ஏற்க மறுத்து தங்களது வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், ''எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைய வேண்டும். அதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் பணம் தருகிறோம் என வற்புறுத்தினார்கள்'' என பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதோடு, அதற்கு தான் ஒப்புக்கொள்ளவில்லை. திமுகவிலேயே இருப்பேன் என்று கூறியதாகவும், அதன் காரணமாகவே கைது செய்யப்பட்டுள்ளேன் என்று தவெக அரசு மீது குற்றசாட்து சுமத்தியுள்ளார்.

அத்துடன், ''என்னை அச்சுறுத்தவோ, தொட்டோ பார்க்க முடியாது. எவ்வளவு இடர்கள் வந்தாலும் உறுதியாக எதிர்கொள்வேன். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யச் சொல்வது ஒருபோதும் நடக்காத காரியம். மேலிடத்தின் உத்தரவின் பேரில் என்னை கட்டுப்படுத்த காவல்துறை முயற்சிக்கிறது'' எனத் தெரிவித்த்துள்ளார். இந்த பேச்சு தற்போது பேசும் பொருளாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Anitha Radhakrishnan alleges that she was pressured to join TVK by offering any amount of money


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->