பெண்களை இழிவுபடுத்தாதீர்கள்...இதுபோன்ற அவமதிப்பு தொடர்ந்தால்....? - பிரேமலதா விஜயகாந்த் கடும் எச்சரிக்கை...!
Do not demean women If such insults persist Premalatha Vijayakanth issues stern warning
அரசியல் கட்சிகள் பெண்களை இழிவுபடுத்துவதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், மீறினால் அனைத்துப் பெண்களையும் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்பேன் என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் திமுகவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் நடிகை ஒருவரைப் பற்றிச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறி போராட்டம் நடத்துபவர்களே பெண்ணைத் தரக்குறைவாக விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டார்.
எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்தச் சாதி அல்லது மதத்தைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் அவர்களை இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது என்றும், விமர்சிப்பவர்களின் குடும்பத்திலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும் என்றும் அவர் சாடினார்.
பெண்களை மதிக்கும் நாட்டில் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால், கட்சி மற்றும் மத அடையாளங்களைக் கடந்து ஒட்டுமொத்தப் பெண் சக்தியையும் திரட்டிப் போராடப் போவதாக அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
English Summary
Do not demean women If such insults persist Premalatha Vijayakanth issues stern warning