வெயிலுக்கு விடை கொடுக்கும் மழை...அடுத்த 7 நாட்கள் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடும் கோடை வெப்பம் நீடித்து வரும் நிலையில், மக்களுக்கு நிம்மதி அளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அடுத்த ஒரு வாரத்திற்கு மாநிலம் முழுவதும் இடையிடையே மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், வெப்பநிலை குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது, மன்னார் வளைகுடா முதல் தெற்கு கர்நாடகா வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் விளைவாக, மார்ச் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மார்ச் 20ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் மட்டும் மழை தொடரும் நிலையில், உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என கூறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, மார்ச் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் மீண்டும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மார்ச் 23 மற்றும் 24ஆம் தேதிகளில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் தென் தமிழகத்தில் மட்டும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நீடிக்கும்.

மேலும், மார்ச் 18 முதல் 20 வரை அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால், கடும் வெயிலில் வாடும் மக்களுக்கு தற்காலிக நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rain Bids Farewell Heat Chance Rain Over Next 7 Days Meteorological Department


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->