ஸ்டார் பெயரில் ஸ்காம்! ரசிகர்களை விழிப்பூட்டிய ரகுல் பிரீத்!
Scam name of star Rakul Preet warns fans
சமூக ஊடகங்களில் பிரபலங்களின் பெயரால் போலி கணக்குகள் உருவாக்கி ஏமாற்றும் சம்பவங்கள் தீவிரமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடிகைகள் அதிராவ் மற்றும் ஸ்ரேயா சரண் ஆகியோரின் பெயரில் வாட்ஸ்அப்பில் போலி ப்ரொஃபைல்கள் உருவாக்கப்பட்டு மோசடி முயற்சிகள் நடைபெற்றன.

இதை தொடர்ந்து, இருவரும் அது தங்களின் எண் அல்ல என்றும், அந்த போலி கணக்குகளை நம்ப வேண்டாமெனவும் எச்சரிக்கை வெளியிட்டனர்.இதே வரிசையில், இப்போது நடிகை ரகுல் பிரீத் சிங் தனது X (எல்ஸ்) பக்கத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
யாரோ ஒருவர் தனது பெயரில் வாட்ஸ்அப் கணக்கை உருவாக்கி, தன்னைப் போல நடித்து மக்களுடன் அரட்டை அடித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.அவரது பதிவில்,“வணக்கம் நண்பர்களே… யாராவது ஒருவர் என்னைப் போல வாட்ஸ்அப்பில் ஆள்மாறாட்டம் செய்வதை கண்டறிந்துள்ளேன்.
இது என் எண் அல்ல என்பதை தெளிவாக அறிவிக்கிறேன். தயவுசெய்து அந்த எண்ணுடன் எந்த உரையாடலிலும் ஈடுபடாமல் உடனடியாக ப்ளாக் செய்யுங்கள்”என்று ரகுல் பிரீத் சிங் எச்சரித்துள்ளார்.
English Summary
Scam name of star Rakul Preet warns fans