தனுஷ் – மிருணாள் தாக்கூர் திருமணமா? எப்போது? பாலிவுட் இயக்குநர் கொடுத்த விளக்கம்!
Dhanush Mrunal Thakur wedding When Explanation given by Bollywood director
நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாக்கூர் காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சூழலில், தனுஷுக்கு நெருக்கமான பாலிவுட் இயக்குநர் ஒருவர் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டின் இறுதியில், தனுஷ் மற்றும் மிருணாள் தாக்கூர் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் பரவத் தொடங்கின. இதற்கு காரணமாக, இருவரும் ஒரு நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டு எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது. அந்தப் புகைப்படத்தில் இருவரும் நெருக்கமாக இருந்ததாகக் கூறி, காதல் மற்றும் திருமண செய்திகள் வேகமாக பரவின.
இந்த கிசுகிசுக்களை இருவரும் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்த நிலையில், சமீபத்தில் காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி இவர்களின் திருமணம் நடைபெற இருப்பதாக புதிய செய்தி ஒன்று இணையத்தில் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்த செய்தி குறித்து தனுஷ் அல்லது மிருணாள் தாக்கூர் யாரும் அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த தனுஷுக்கு மிகவும் நெருக்கமான பாலிவுட் இயக்குநர், இந்த வதந்திகள் அனைத்தும் அடிப்படையற்றவை என்று தெளிவுபடுத்தியுள்ளார். அவர் கூறியதாவது,
“தனுஷ் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. நாங்கள் இருவரும் தினமும் தொலைபேசியில் பேசிக் கொண்டே இருக்கிறோம். யாருக்கும் தெரியாமல் அவர் எப்படி திருமணம் செய்து கொள்வார்? விவாகரத்து நடந்தபோது கூட, மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா விஷயத்தில் இருவரும் இணைந்து இருப்போம் என்று தனுஷும் ஐஸ்வர்யாவும் முடிவு செய்துள்ளனர்.
தனுஷுக்கு இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இல்லை. அதற்கு முக்கிய காரணம் அவரது மகன்கள் தான். அவர்கள் மீது அவர் அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார். மிருணாள் தாக்கூரும் தனுஷும் நல்ல நண்பர்கள். நண்பர்களாக இருப்பதால் மட்டுமே திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று சொல்ல முடியாது. சில விசமிகள் தேவையில்லாத வதந்திகளை இப்படித்தான் பரப்புவார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விளக்கத்தின் மூலம், தனுஷ் – மிருணாள் தாக்கூர் திருமணம் தொடர்பான செய்திகள் வெறும் வதந்தி என்பதே தற்போது தெளிவாகியுள்ளது.
English Summary
Dhanush Mrunal Thakur wedding When Explanation given by Bollywood director