மேகாலயா கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் வன்முறை; தேர்தல் மனுத்தாக்கலின் போது இரு பிரிவினருக்கு இடையிலான மோதலில் இருவர் பலி ; ராணுவத்தினர் குவிப்பு..! - Seithipunal
Seithipunal


மேகாலயா மாநிலத்தில் உள்ள கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் கரோ ஹில்ஸ் தன்னாட்சி மாவட்ட கவுன்சில் தேர்தலுக்கான மனுதாக்கல் நடைபெற்று வருகிறது. இந்த மனுதாக்குதலின் போது இரு பிரிவனருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

அதாவது பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாத பிரிவினர் இடையே ஏற்பட்ட இந்த மோதல் வன்முறையாக வெடித்துள்ளது.

இதனால் அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் மனுதாக்கலின் போது ஏற்பட்ட வன்முறையின் போது கும்பலை கலைக்க பாதுகாப்புப்படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இருவர் கொல்லப்பட்ட்டுள்ளதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

கரோ ஹில்ஸ் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ராணுவம் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அங்கு எத்தனை Column குவிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியிட நிர்வாகம் மறுத்துள்ளது. அதாவது ஒரு Column என்பது 60 முதல் 80 வீரர்கள் கொண்ட குழு ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Clashes between two groups during a petition in Meghalayas Garo Hills district


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->