உலகின் முக்கிய கடல்வழி பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்; உலகளவில் உணவு பொருட்களின் விலை உயரும் அபாயம்..! - Seithipunal
Seithipunal


ஈரான் மீது இஸ்ரேல் -அமெரிக்கா கூட்ட இணைத்து தாக்குதல் நடத்தியதால் ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. அத்துடன், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல முயலும் எந்தவொரு கப்பலும் தீயிட்டு கொளுத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது

இந்த ஹார்முஸ் ஜலசந்தியானது இரான் மற்றும் ஓமான் இடையே உள்ள மிகவும் குறுகிய கடல் பாதை. சுமார் 33 கி.மீ (21 miles) அகலம் கொண்டது. இது உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழியாகும். உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் தேவையில் ஐந்தில் ஒரு பங்கு, அதாவது 20% இந்தப் பாதை வழியாகவே தான் செல்கிறது. தினமும் சுமார் 02 கோடி பேரல் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் கொண்டு வருவதற்காக இந்த பாதையை குவைத், கத்தார், UAE, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் அதிகமாக பயன்படுத்துகின்றன.

இந்த சூழலில் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ள நிலையில், அவ்வழியே செல்லும் கப்பல்களை அவர்கள் நிறுத்தவில்லை. ஆனால், அதற்கு மாறாக அவ்வழியே செல்லும் கப்பல்களுக்கு "இங்கு செல்லுவது அபாயம்" என்று ஈரான் எச்சரிக்கை விடுத்தார்கள். இதனால் கப்பல் கம்பெனிகள் இந்த வழியே செல்ல அச்சப்பட்டது.

அதே நேரம் Lloyd's of London என்ற உலகின் மிக பழமையான கப்பல் இன்சூரன்ஸ் நிறுவனம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு war-risk இன்சூரன்சையும் ரத்து செய்தது. அதாவது இன்சூரன்ஸ் இல்லாமல் கப்பல் செல்ல முடியாது.ஏனெனில், அவ்வாறு செல்லும் கப்பல்கள் கடலில் கப்பல் விபத்து அல்லது தாக்குதல் நடந்தால், எண்ணெய் கசிவு நடந்தால் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். அதனால் கப்பல்கள் இன்சூரன்ஸ் இல்லாமல் பயணம் செய்ய முடியாது என்ற சட்டம் உள்ளது.

தற்போது ஹார்முஸ் ஜலசந்தி திறந்து உள்ள நிலையிலும், அவ்வழியே செல்லும் கப்பல் போக்குவரத்து வெகுவாக குறைந்து விட்டது. ஒரு நாளுக்கு 79 கப்பல்கள் சென்று வந்த இந்த பாதையில் இப்போது 07 கப்பல்கள் மட்டும் சென்று வருகிறது.

அதாவது ஈரான் போருக்கு முன்னர் இன்சூரன்ஸ் தொகை கப்பல் மதிப்பில் 0.25% மட்டும் தான். ஆனால்,  இப்போது ஒவ்வொரு வாரமும் கப்பல் மதிப்பில் 1% இன்சூரன்ஸ் கட்டவேண்டும். பல கப்பல் கம்பனிகளால் இந்த தொகையை சமாளிக்க முடியாத நிலை உள்ளது.

இதன் காரணமாக  நெதர்லாந்து கேஸ் விலை 52 சதவீதமும், இங்கிலாந்து கேஸ் விலை 48 சதவீதமும் ஆசியாவின் LNG விலை 39 சதவீதமும் அதிகரித்துள்ளது.

அத்துடன், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உரங்களின் உலகளாவிய போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. உரங்களின் போக்குவரத்தில் 33% ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் மேற்கொள்ளப்படுகிறது. கத்தார், ஈரான், UAE ஆகிய நாடுகள் உலகளாவிய அளவில் முக்கிய உர ஏற்றுமதி நாடுகளாகும்.

இதன் காரணமாக உரங்களின் விலை உயர்வால் விவசாயிகள் உரங்களை குறைவாக பயன்படுத்துவார்கள். இதனால் விளைச்சல் வெகுவாக குறைந்து உணவு விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது. இதன் காரணமாக உலகளாவிய அளவில் உணவு பொருட்களின் விலை அதிகரிக்கும் சூழல் உருவாகும். அதன்படி, இந்த விளைவுகளை நாம் இந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் எதிர்க்கொள்ள நேரிடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Closing the Strait of Hormuz risks raising global food prices


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->