2026 ஆம் ஆண்டுக்கான டி20 ஆண்கள் உலக கோப்பை தொடரின் அட்டவணை வெளியானது: இந்தியா, இலங்கை ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!
2026 T20 Mens World Cup Schedule Released
20 அணிகள் பங்கேற்கும் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான முழுமையான அட்டவணை இன்று (நவம்பர் 25) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் இந்த 10வது போட்டிகள், அடுத்த ஆண்டு பிப்ரவரி 07-ஆம் தேதி தொடங்கி மார்ச் 08-ஆம் தேதி வரை 29 நாட்கள் நடைபெறவுள்ளது.
நடப்பு சாம்பியனான இந்திய அணி, வரும் 2026 பிப்ரவரி 07ஆம் தேதி மும்பையில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. இதன் மூலம் தனது 2026 டி 20 உலக கோப்பைப் பயணத்தைத் ஆரம்பிக்கிறது.

இதில் கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்புவில் உள்ள ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெறஉள்ளது. பிப்ரவரி 07 முதல் 20 வரை, டி 20 உலக கோப்பைக்கான 40 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது.
குரூப் A: இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா (USA), நமீபியா, நெதர்லாந்து.
குரூப் B:ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன்.
குரூப் C: இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ், இத்தாலி, நேபாளம்.
குரூப் D: தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE).
இந்தியா மற்றும் இலங்கையில் மொத்தம் எட்டு மைதானங்களில் (இந்தியா-05, இலங்கை-03) போட்டிகள் நடக்கின்றன. லீக் சுற்றுக்குப் பிறகு, முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 08 சுற்றுக்கு முன்னேறும்.
அத்துடன், கொல்கத்தா, கொழும்பு மற்றும் மும்பையில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. ஒருவேளை பாகிஸ்தான் அல்லது இலங்கை அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றால், அது கொழும்பில் நடத்தப்படும். மேலும், மார்ச் 08 ஆம் தேதி இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் அல்லது கொழும்புவில் நடைபெறும். அதாவது, பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால், போட்டி கொழும்புவுக்கு மாற்றப்படும்.

இந்த 2026 டி 20 உலாகி கோப்பை போட்டியானது, இந்தியா மற்றும் இலங்கை மண்ணில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் அமையும் என்று ஐசிசி தலைவர் ஜெய் ஷா மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சஞ்சோக் குப்தா ஆகியோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
https://www.icc-cricket.com/tournaments/mens-t20-world-cup-2026/news/fixtures-groups-released-for-icc-men-s-t20-world-cup-2026
English Summary
2026 T20 Mens World Cup Schedule Released