எஸ்.ஐ .ஆர் பணிகள்: 8 தொகுதிகளிலும் ஒரே நாளில் ஆய்வு செய்த தேர்தல் ஆணைய அதிகாரி: ஆய்வு நடந்ததே தெரியாத திருப்பூர் மாவட்ட பொதுமக்கள்..? - Seithipunal
Seithipunal


தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி கடந்த நவம்பர் 04-ஆம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களில் உள்ள தொகுதிகளிலும் BLO மூலம், விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

ஒரு சில தொகுதிகளில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களும் பெறப்பட்டும் வருகிறது. இந்த எஸ்ஐஆர் சிறப்பு திருத்தத்தை பொருத்தவரை 2002 ஆம் ஆண்டு வாக்களித்த நபர்களின் பாகம் எண் மற்றும் வரிசையில் கேட்பதால் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதில் பொதுமக்களிடையே பெருத்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் விண்ணப்பங்களை எப்படி பூர்த்தி செய்வது என்பது என்று தெரியாமல் பொதுமக்கள் குழம்பி வருகின்றனர். 

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்த வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில்,  அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் இந்த சிறப்பு திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் அமைக்கப்பட்ட குழுவினர் தமிழகத்தில் இந்த சிறப்பு தீவிரப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.

இதன் ஒரு கட்டமாக இன்று திருப்பூர் வந்த தேர்தல் ஆணைய இயக்குனர் கிருஷ்ணகுமார் திவாரி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ், மாநகராட்சி ஆணையர் அமித் உள்ளிட்ட பலர் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட எட்டு தொகுதிகளிலும் கள ஆய்வு மேற்கொண்டனர். இதன் முதற்கட்டமாக அவிநாசி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் தொடர்ந்து திருப்பூர் வடக்கு தொகுதியிலும், தெற்கு தொகுதியிலும் கள ஆய்வு மேற்கொள்ள வந்தனர்.

இவர்கள் போகிற வழியில் ஒன்று இரண்டு இடங்களில் மட்டும் கள ஆய்விற்காக இறங்கி அதிகாரிகளிடம் மட்டும் விண்ணப்பங்கள் எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது..? எத்தனை விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு திரும்பபெறப்பட்டுள்ளது..? போன்ற விவரங்களை கேட்டுவிட்டு உடனடியாக அடுத்த இடங்களுக்கு சென்றுள்ளனர்.  இதனால் வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து பொதுமக்களிடம் என்ன குறைகள் உள்ளது..? பூர்த்தி செய்வதில் உள்ள இடர்பாடுகள் என்ன..? போன்றவை குறித்து எந்தவித கேள்வியும் கேட்கவில்லை என கூறப்படுகிறது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தியாகி பழனிச்சாமி காலனி மற்றும் கோம்பை தோட்டம் பகுதிகளில் சுமார் 1000க்கும் மேற்பட்டோரின் வாக்குகள் மாயமாக இருந்த சூழலில் அது தொடர்பாக அந்த பகுதிகளுக்கு சென்று எந்தவித கல ஆய்வுகளும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்திற்குள் வந்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் அதன் பின்னர் பல்லடம் தாலுகாவிற்கு ஆய்வு மேற்கொள்ள சென்றுள்ளனர்.

இந்த எஸ்ஐஆர் பணிகளால் படிவங்களை நிரப்புவதில் ஏகப்பட்ட இடர்பாடுகள் குழப்பங்கள் நிலவி வரும் சூழலில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வந்தால் தங்களது கேள்விகளுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்த பொதுமக்களுக்கு இந்த ஆய்வு நடந்ததா என்பதே தெரியாத வகையில் நடத்தி முடிக்கப்பட்டு இருப்பது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Election Commission officer who inspected all 8 constituencies in Tiruppur district in a single day


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->