படகோட்டியை முதலாளியாக மாற்றிய விஜய் சேதுபதி! சொன்ன உடனே 50 ஆயிரத்தை குடுத்த விஜய் சேதுபதி! - Seithipunal
Seithipunal


சினிமா பிரபலங்கள் பல சமயங்களில் செய்யும் உதவிகள் வெளிச்சத்துக்கு வராது. சிலர் தாங்கள் செய்யும் உதவியைச் சொல்லிக்கொள்வார்கள், சிலர் ஒருபோதும் வெளியிட மாட்டார்கள். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி அமைதியாக செய்த மனிதநேய செயல் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பும் பாராட்டையும் பெற்றுள்ளது.

பிக் பாஸ் மேடையில் கெமி எலிமினேஷன் ஆனபோது, விஜய் சேதுபதி தன் கூலிங் கிளாஸை அவளுக்குப் பரிசளித்ததும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. அந்தச் சம்பவம் இன்னும் பேசப்பட்டுக்கொண்டிருக்க, தற்போது அவரின் மனம் கவரும் உதவி ஒன்று வைரலாகியுள்ளது.

ஒரு ஏரிக் கரையில் படகு ஓட்டும் தொழிலாளி ஒருவர் பகிர்ந்த குறிப்பின் படி—பல முன்னணி நடிகர்கள், பெரிய ஸ்டார்கள் அந்த ஏரிக் கரையில் உள்ள தனி வீட்டுக்கு ஷூட்டிங்கிற்கு செல்லும்போது இந்த நபர் தான் அவர்களை படகில் அழைத்துச் செல்வார். பலர் உதவி செய்வோம் என்று சொல்லியும் மறந்து போவார்கள்; சிலர் மட்டும் உதவியிருப்பார்கள்.

அந்த வரிசையில் ஒருநாள் விஜய் சேதுபதி அங்கு படப்பிடிப்பிற்காக வந்திருந்தார். ஷூட்டிங் முடிந்தபின், அவரை படகில் ஏற்றி மறுகரைக்கு அழைத்துச் செல்லும் போது விஜய் சேதுபதி,“இந்த படகு உங்களுடையதா?” என்று கேட்டார்.அவர், “இல்லை சார்… வாடகை படகு. தினமும் வாடகை கொடுக்கணும்,” என்றார்.அதைக் கேட்ட விஜய் சேதுபதி, “சொந்தமாக இப்படகை வாங்க எவ்வளவு ஆகும்?” என்று கேட்டார்.

படகோட்டியாளர் “ஐம்பதாயிரம் ரூபாய் வரை ஆகும் சார்” என்று கூறியவுடன், அங்கிருந்த படகிலேயே அவர் பெயருக்கு ரூ.50,000 மதிப்பு காசோலையை எழுதி கொடுத்தார்.“இனி வாடகை படகை ஓட்ட வேண்டாம்… சொந்த படகை வாங்கி ஓட்டுங்க,” என்று சொல்லி ஊக்கம் அளித்தார்.

இந்த சம்பவத்தை அந்த படகோட்டியாளர் உணர்ச்சியுடன் பகிர்ந்துள்ளது X (Twitter) பக்கங்களில் வைரலாகி வருகிறது.
“கஷ்டப்பட்டு ஜெயிக்கிறவர்களுக்கு தான் வாழ்க்கையின் வலி தெரியும்,” என்றார் அவரை பாராட்டிய நெட்டிசன்கள்.

உதவி செய்பவர்கள் பலர் இருந்தாலும், இப்படிப் பேசாமல் உதவும் மனசு கொண்ட ஸ்டார்கள் அரிது. விஜய் சேதுபதி அந்த பட்டியலில் மறுபடியும் தனது பெயரை எழுதித்தான் விட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay Sethupathi turned a boatman into a boss Vijay Sethupathi immediately gave him 50 thousand


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->