"என் திருமணத்தில் இவ்வளவு ஆர்வமா?" – இரண்டாவது திருமண கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த மீனா!
Are you so interested in my marriage Meena puts an end to second marriage gossip
தென்னிந்தியாவின் ‘கண்ணழகி’ என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை மீனா, பல ஆண்டுகளாக பரவி வந்த இரண்டாவது திருமண கிசுகிசுக்களுக்கு முதன்முறையாக நேரடியாக பதில் அளித்துள்ளார். ரஜினி, கமல், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனித்த இடத்தைப் பிடித்தவர் மீனா.
2009ஆம் ஆண்டு வித்யாசாகரை திருமணம் செய்த அவர், நைனிகா என்ற மகளின் தாயார். விஜயின் தெரி படத்தில் நைனிகா சிறப்பு வேடத்தில் நடித்தது இன்னும் நினைவிலிருக்கிறது. ஆனால் சில வருடங்களுக்கு முன், கொரோனா காலத்தில் வித்யாசாகர் உடல்நல குறைவால் உயிரிழந்தார். கணவர் இழப்பால் மனஉளைச்சலில் சிக்கிய மீனாவை, நண்பர்கள் கலா மாஸ்டர், சங்கீதா உள்ளிட்டோர் மெதுவாக மீட்டெடுத்தனர்.
இந்நேரத்தில், மீனா இரண்டாவது திருமணம் செய்யப்போகிறார் என்ற கிசுகிசு அடிக்கடி கிளம்பியது. குறிப்பாக தனுஷ்–ஐஸ்வர்யா பிரிவு நடந்தபோது, தனுஷ்–மீனா திருமணம் என்பதே சிலர் பரப்பிய வதந்தியாக மாறியது. எந்த நடிகர் விவாகரத்தானாலும் அதை மீனாவுடன் இணைத்து பேசும் அளவிற்கு இணையத்தில் வதந்திகள் பரவின. அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற செய்திகளும் பரவின.
இதுவரை அமைதியாக இருந்த மீனா, சமீபத்தில் ஒரு பேட்டியில் தெளிவாக கூறியதாவது:“என் திருமணத்தில் சிலர் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என எனக்கு புரியவில்லை! நான் என் மகளுடன் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். இரண்டாவது திருமணம் செய்ய எந்த திட்டமும் இல்லை. எந்த ஹீரோ விவாகரத்தானாலும், அவர்களுடன் என்னை இணைத்து பேசுகிறார்கள். உண்மையில் அதில் ஒன்றும் இல்லை. நான் நடிப்புக்கே முன்னுரிமை கொடுக்கிறேன்.”
இவ்வாறு கூறிய அவர், திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இப்போது மீனா முழுமையாக நடிப்பில் கவனம் செலுத்தி வருவதை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று வருகின்றனர்.
English Summary
Are you so interested in my marriage Meena puts an end to second marriage gossip